Saturday, May 18, 2024
Homeஇந்திய செய்திகள்இந்தியாவில் தடுப்பூசி மற்றும் பொருளாதார தாக்கங்களை மதிப்பிடுதல்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ..!இந்தியாவில் 34...

இந்தியாவில் தடுப்பூசி மற்றும் பொருளாதார தாக்கங்களை மதிப்பிடுதல்’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ..!இந்தியாவில் 34 லட்சம் உயிர்களை காப்பாற்றிய தடுப்பூசி…

கொரோனா பரவலை 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக சுகாதார மையம் சுகாதார அவசர நிலையாக அறிவித்தது. அன்று தொடங்கி இந்திய அரசும் சுகாதாரத் துறையும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்  ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு குறித்து பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் தடுப்பூசி மற்றும் சம்பந்தமான விஷயங்களின் பொருளாதார தாக்கங்களை மதிப்பிடுதல்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.  கொரோனா தடுப்பூசி திட்டத்தை இதுவரை இல்லாத அளவில் மிக பிரம்மாண்டமாக நாடு முழுவதும் மேற்கொண்டு, இந்தியா 34 லட்சம் உயிர்களை பாதுகாத்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா விழிப்புணர்வு பரப்புரை திட்டத்தினால் நேர்மறையான பொருளாதார தாக்கம் ஏற்பட்டதோடு 18.3 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டம் அடைவதில் இருந்து தடுக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டத்தை இந்தியா தொடங்கி அதன் மூலம் 97 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 90 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

அவ்வாறு நாடு முழுவதும் தகுதி வாய்ந்தவர்களுக்கு மொத்தம் 220 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா கூறினார். மத்திய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகங்களிடம் தொடர் ஒருங்கிணைப்பின் காரணமாக கொரோனா பெருந்தொற்றின் தீவிர பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டது. அது மட்டுமல்லாமல், பொருளாதார நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்பட்டன என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments