Sunday, May 5, 2024
Homeஇந்திய செய்திகள்குறிப்பிட்ட 5 வங்கிகளில் நிதி பரிவர்த்தனை மேற்கொள்ள கட்டுப்பாடுகள்..!

குறிப்பிட்ட 5 வங்கிகளில் நிதி பரிவர்த்தனை மேற்கொள்ள கட்டுப்பாடுகள்..!

இந்தியாவில் பொதுத்துறை, தனியார் வங்கிகளைப் போலவே கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு கீழ் இயங்கி வருகின்றன. இந்த வங்கிகளின் நிதி நிர்வாகத்தில் விதிமீறல்கள் ஏற்படும் போது ரிசர்வ் வங்கி தலையிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும். அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி தற்போது 5 கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, HCBL கூட்டுறவு வங்கி, உரவகொன்டா கூட்டுறவு நகர வங்கி, ஆதர்ஷ் மஹிளா நகரி சஹகாரி வங்கி மர்யாதித், சிம்ஷா ஷங்கரா வங்கி நியமிதா, ஷங்கர்ராவ் மோஹிதே பாடீல் ஷஹகாரி வங்கி ஆகிய 5 வங்கிகளில் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி இல்லாமல் இனி இந்த வங்கிகள் புதிதாக டெபாசிட் அல்லது கடன் வழங்க முடியாது. மேலும், இந்த வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட வங்கிகளில் மோசமான நிதி நிலைமை இருப்பதே ரிசர்வ் வங்கி இந்த கட்டுப்பாடுகளை விதிக்க காரணம். மேலும், தங்கள் வைப்பு தொகையின் மீது அச்சத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் ஆவணங்களை சமர்பித்து ரூ.5 லட்சம் வரை காப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த வழிகாட்டுதல்களை கொண்டு வங்கியின் உரிமங்கள் ரத்தாகி விட்டதாக வாடிக்கையாளர்கள் தவறாக புரிந்து கொள்ள கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

இவற்றின் நிதி நிலைமை மேம்படும் வரை கட்டுப்பாடுகளுடன் இவை இயங்கும். சமீப காலமாகவே, பலவீனமான கூட்டுறவு வங்கிகளை கண்டறிந்தை அவற்றின் மீது ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், பல வங்கிகளின் உரிமங்களை ரத்து செய்தும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments