Tuesday, April 30, 2024
Homeஉலக செய்திகள்இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்து தான் காரணம்… உஸ்பெகஸ்தானில் 18 குழந்தைகள் பலியணதற்கு காரணம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட...

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்து தான் காரணம்… உஸ்பெகஸ்தானில் 18 குழந்தைகள் பலியணதற்கு காரணம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து தான் என குற்றச்சாட்டு….

தாஷ்கண்ட்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் 18 பேர் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.ஏற்கெனவே காம்பியாவில் இந்தியாவின் இருமல் மருந்தை உட்கொண்டதில் 66 குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த குற்றச்சாட்டு சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் டெல்லி அருகே உள்ள நொய்டாவில் டாக்-1 மேக்ஸ்(Doc-1 Max) எனும் இருமல் மருந்து மரியான் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மருந்துகள் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு இந்த மருந்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் உஸ்பெகிஸ்தானும் ஒன்று. இந்நாட்டில் சமீபத்தில் சில குழந்தைகள் உடல் நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் Doc-1 Max எனும் இருமல் மருந்தை இவர்கள் அதிக அளவில் எடுத்துக்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. அதாவது இந்த Doc-1 Max எனும் சிரப்களில் எத்திலீன் கிளைகோல் எனும் நச்சு பொருள் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த சிரப்பை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் கிளினிக்கில் உள்ளவர்களின் பரிந்துரையின் பெயரில் குழந்தைகளுக்கு அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது.நடவடிக்கை

அதாவது இந்த சிரப்பை 2.5 முதல் 5 மில்லி அளவுகளில் ஒரு நாளைக்கு 3-4 வேளைகள் வரை வழங்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை விட அதிகமான அளவாகும். இதன் காரணமாக சுமார் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதனையடுத்து Doc-1 Max சிரப் மற்றும் மாத்திரைகள் அந்நாட்டின் அனைத்து மருந்தகங்களிலிருந்தும் திரும்பப்பெறப்பட்டுள்ளது. இந்த மருந்துகளின் பாதிப்புகளை கண்டறிந்த பின்னரும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியதாக 7 சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.விசாரணை

இந்த சம்பவம் இந்திய தயாரிப்புகள் மீதான நம்பிக்கை தன்மை மீது கேள்வியெழுப்பியுள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ – வடக்கு மண்டலம்) மற்றும் உத்தரப் பிரதேச மருந்து கட்டுப்பாடு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் ஆகியவை இணைந்து விசாரணை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இந்த உயிரிழப்புகள் குறித்து விரிவானை அறிக்கை உஸ்பெகிஸ்தான் அரசிடமிருந்து கோரப்பட்டிருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் இதே போல இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததில் காம்பியாவில் 70 குழந்தைகள் உயிரிழந்திருந்தனர்.

அதிர்ச்சி.. உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் பலி! இந்திய இருமல் மருந்துதான் காரணம்? பகீர் குற்றச்சாட்டு

தாஷ்கண்ட்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் 18 பேர் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.ஏற்கெனவே காம்பியாவில் இந்தியாவின் இருமல் மருந்தை உட்கொண்டதில் 66 குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த குற்றச்சாட்டு சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் டெல்லி அருகே உள்ள நொய்டாவில் டாக்-1 மேக்ஸ்(Doc-1 Max) எனும் இருமல் மருந்து மரியான் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மருந்துகள் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு இந்த மருந்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் உஸ்பெகிஸ்தானும் ஒன்று. இந்நாட்டில் சமீபத்தில் சில குழந்தைகள் உடல் நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் Doc-1 Max எனும் இருமல் மருந்தை இவர்கள் அதிக அளவில் எடுத்துக்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. அதாவது இந்த Doc-1 Max எனும் சிரப்களில் எத்திலீன் கிளைகோல் எனும் நச்சு பொருள் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த சிரப்பை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் கிளினிக்கில் உள்ளவர்களின் பரிந்துரையின் பெயரில் குழந்தைகளுக்கு அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

அதாவது இந்த சிரப்பை 2.5 முதல் 5 மில்லி அளவுகளில் ஒரு நாளைக்கு 3-4 வேளைகள் வரை வழங்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை விட அதிகமான அளவாகும். இதன் காரணமாக சுமார் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதனையடுத்து Doc-1 Max சிரப் மற்றும் மாத்திரைகள் அந்நாட்டின் அனைத்து மருந்தகங்களிலிருந்தும் திரும்பப்பெறப்பட்டுள்ளது. இந்த மருந்துகளின் பாதிப்புகளை கண்டறிந்த பின்னரும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியதாக 7 சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

விசாரணை

இந்த சம்பவம் இந்திய தயாரிப்புகள் மீதான நம்பிக்கை தன்மை மீது கேள்வியெழுப்பியுள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ – வடக்கு மண்டலம்) மற்றும் உத்தரப் பிரதேச மருந்து கட்டுப்பாடு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் ஆகியவை இணைந்து விசாரணை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இந்த உயிரிழப்புகள் குறித்து விரிவானை அறிக்கை உஸ்பெகிஸ்தான் அரசிடமிருந்து கோரப்பட்டிருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் இதே போல இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததில் காம்பியாவில் 70 குழந்தைகள் உயிரிழந்திருந்தனர்.

காம்பியா சம்பவம்

சில நாட்களுக்கு முன்னர் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் திடீரென குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்த பின்னரும் குழந்தைகளின் உடல் நலனில் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனையடுத்து அவர்களில் சிலரின் உடல் நிலை திடீரென மோகமாகி ஒவ்வொருவராக உயிரிழக்க தொடங்கினர். மொத்தமாக 66 பேர் இவ்வாறு உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து இந்திய மருந்துகள் குறித்து அச்சம் உருவானது.இதனையடுத்து, இந்தியாவில் தயாரான நான்கு இருமல் சிரப்கள் கடுமையான சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், இதுதான் காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் எனவும் WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார். மேலும், ப்ரோமெதாசின் மருந்து (Promethazine Oral Solution), கோஃபெக்ஸ்மாலின் இருமல் சிரப் (Kofexmalin Baby Cough Syrup), மாகோஃப் பேபி காஃப் சிரப் (Makoff Baby Cough Syrup) மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் ( Magrip N Cold Syrup) ஆகிய சிரப்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் WHO அறிவுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments