Friday, May 17, 2024
Homeஇந்திய செய்திகள்இன்று தொடங்கப்படும் புத்தக கண்காட்சி… சென்னையில் 1000 அரங்குகளில் சிறப்பு ஏற்ப்பாடு.

இன்று தொடங்கப்படும் புத்தக கண்காட்சி… சென்னையில் 1000 அரங்குகளில் சிறப்பு ஏற்ப்பாடு.

சென்னையில் 46வது சர்வதேச புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த புத்தக கண்காட்சியை இன்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த 46வது சர்வதேச புத்தக கண்காட்சி இன்று தொடங்கி, ஜனவரி 22ம் தேதி வரை 17 நாட்களுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அது குறித்த அறிவிப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ளது. மேலும் இதில் வரும் 16,17,18ஆகிய தேதிகளில் சர்வதேச புத்தக காட்சி நடைபெறுகிறது.

இதுகுறித்து பேசிய பொது நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத், “தமிழுக்கு வந்த மொழிபெயர்ப்பு நூல்களும் தமிழிலிலிருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல்களும் மிக குறைவு. இத்தனை ஆண்டுகாலத்தில் இலக்கிய செழுமை வாய்ந்த தமிழிலிருந்து 100 புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிற மொழிகளிலிருந்து சுமார் 1000 ஆயிரம் புத்தகங்கள் மட்டுமே மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மிககுறைவாகும்.

தமிழின் சிறப்புகளை உலக அளவில் கொண்டு செல்ல சென்னை சர்வதேச புத்தக காட்சி உதவிடும். தமிழிலிருந்து 200 தலைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது அமெரிக்கா,லண்டன், இத்தாலி,பிலிப்பைன்ஸ்,டாண்சானியா, அர்ஜெண்டினா உள்ளிட்ட 25 நாடுகளிலிருந்து பதிப்பாளார்கள் கலந்து கொண்டு தங்கள் படைப்புகளை காட்சி ப்படுத்த இருப்பதாக கூறினார்.

இதன்மூலம் நம் தமிழ் படைப்பாளர்களுக்கும் வெளிநாட்டு படைப்பாளர்களுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்ப்படும். முதலில் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் அதன்பின்னர் சம்பந்தப்பட்ட மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும் இதற்காக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நடக்கும் புத்தக கண்காட்சியில் சுமார் ஆயிரம் அரங்குகளுடன் சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய பிரத்யேக அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments