Sunday, April 28, 2024
Homeஇலங்கை செய்திகள்இன்றைய ராசி பலன்கள் - ஜனவரி 18, 2023 புதன்கிழமை

இன்றைய ராசி பலன்கள் – ஜனவரி 18, 2023 புதன்கிழமை

மேஷம்
தொழிலை விரிவுபடுத்த நினைக்காதீர்கள். கையில் இருக்கும் பொருளை கவனக்குறைவால் தொலைத்து விடாதீர்கள். காதலியிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். பங்குச்சந்தையில் ஈடுபடாதீர்கள். அடுத்தவரின் ஆசை வார்த்தைக்கு மயங்காதீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போங்கள். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாதீர்கள்.

ரிஷபம்
வெளியூர்ப் பிரயாணங்கள் தொழிலுக்குத் தேவையான வெற்றிகளைப் பெறுவீர்கள். இல்லத்தரசிகள் மூலமாக பணச்சுமையை குறைப்பீர்கள். நோய் தாக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் கிடைத்த லாபத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். அரசுப்பணியாளர்கள் ஊக்கத்தொகை பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள்.

மிதுனம்
புது நண்பர்களின் சேர்க்கையால் அதிக நன்மை அடைவீர்கள். வியாபாரம் வெற்றிகரமாக நடப்பதால் பொருளாதார மேம்பாடு காண்பீர்கள். உறவினர்களிடம் இருந்த மனக்கசப்பை மாற்றுவீர்கள். எதிர்ப்புகளைத் தாண்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பீர்கள்.

கடகம்
தேவையில்லாத கற்பனையால் மனக்கவலையில் துன்பப்படுவீர்கள். எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுமாற்றம் அடைவீர்கள். அடுத்தவரின் பேச்சைக் கேட்டு அகலக்கால் வைக்காதீர்கள். சோம்பேறித்தனத்தால் நல்ல வாய்ப்பை இழப்பீர்கள். அரசு ஊழியர்கள் நேர்மையைக் கடைபிடியுங்கள். எளியவர்களுக்கு உதவி செய்து செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள்.

சிம்மம்
வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் பணத்தால் உங்கள் விதியை மாற்றி அமைப்பீர்கள். நிலத்தில் போட்ட முதலீடுகளால் வருமானத்தைப் பெருக்கி நிம்மதியை அடைவீர்கள். வியூகம் அமைத்து தொழிலை நடத்துவீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்த இடையூறுகளை மாற்றுவீர்கள். பங்குச்சந்தை பரிவர்த்தனைகளில் ஏற்றத்தைப் பெறுவீர்கள்.

கன்னி
ஆசையுடன் கேட்ட ஆபரணத்தை வாங்கிக்கொடுத்து மனைவியை ஆனந்தத்தில் ஆழ்த்துவீர்கள். உறவினர்களிடம் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். நண்பர்கள் மூலமாக நல்ல செய்தி பெறுவீர்கள். சகோதர உறவுகளில் இருந்த மணக்கசப்பை நீக்குவீர்கள். அன்பாக பேசி காதலியின் மனதில் இடம் பிடிப்பீர்கள். நோய் நீங்கி நிம்மதி பெறுவீர்கள்

துலாம்
அடுத்தவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அந்தஸ்தை அதிகரிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கை நிலைநாட்டுவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளைச் செய்வீர்கள். புதிய வாகனங்கள் வாங்க அட்வான்ஸ் கொடுப்பீர்கள். ஐடி பணியாளர்கள் கடினமான முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பொறுப்பாக வேலை செய்து புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்
நல்ல பாதையில் நடந்தாலும் பொல்லாத வம்பில் மாட்டிக் கொள்வீர்கள். காதலியின் கோபத்தால் தூக்கத்தை தொலைப்பீர்கள். திருடு போகாமல் இருக்க வாகனங்களை பூட்டி விட்டு செல்லுங்கள். அடுத்தவர் விஷயத்தில் எந்தக் காரணத்தைக் கொண்டும் தலையிடாதீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள்.எதிலும் இரண்டு மடங்கு எச்சரிக்கையுடன் இருங்கள்.

தனுசு
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு தீர்வு கிடைக்காமல் வேதனைப்படுவீர்கள். வேலையிடத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். பங்காளி சண்டையால் காவல் நிலையம் செல்வீர்கள். அலட்சியமாக இருந்து அவஸ்தைப் படாதீர்கள். பைக் ஓட்டும்போது கவனத்தைச் சிதற விடாதீர்கள். விபத்துகளால் காயப்படுவீர்கள்.

மகரம்
முறைப்புடன் இருந்த மனைவியின் மனதை மாற்றுவீர்கள். பெரியோர்களின் நல்லாசியால் ஊக்கத்தை பெறுவீர்கள். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிப்பீர்கள். வெளிநாட்டுக்குச் செல்வதற்கான ஏற்பாட்டை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.

கும்பம்
பொங்கிவரும் அருவிபோல் பொருள் வரவை பார்ப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் இடத்திலிருந்து பெறுவீர்கள். அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு பெற்று சந்தோஷம் அடைவீர்கள். தனியார் துறையிலும் கணிசமான வருமானம் பெறுவீர்கள். எதிர்ப்புகளை முறியடித்து வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். உங்களுடைய வாக்கு வன்மையால் மரியாதை அடைவீர்கள்.

மீனம்
உங்களை வீழ்த்த நினைக்கும் எதிரிகளால் பாதிப்படைவீர்கள். ஆனால் விடாமுயற்சியால் அதை முறியடிப்பீர்கள். எப்பாடுபட்டாவது கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் வெறும் அலைச்சலை அடைவீர்கள். அநாவசியமாக யாருக்கும் அறிவுரை கூறாதீர்கள். அவஸ்தையில் சிக்கி மனநிம்மதி இழப்பீர்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments