Friday, May 3, 2024
Homeஅரசியல்செய்திஇரட்டை இலை சின்னம் யாருக்கு.? சிதறுமா வாக்குகள்.. திரும்பும் எம்.ஜி.ஆர். கால வரலாறு!?

இரட்டை இலை சின்னம் யாருக்கு.? சிதறுமா வாக்குகள்.. திரும்பும் எம்.ஜி.ஆர். கால வரலாறு!?

இரட்டை இலை சின்னம் முடங்க தான் காரணமாக இருக்க மாட்டேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறி வரும் நிலையில், தனி சின்னத்திலாவது போட்டி வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி முனைப்பு காட்டி வருகிறார்.

ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு தனி சின்னத்தில் போட்டியிட்டால் யாருக்கு லாபம்? அதிமுக வாக்குகள் சிதறுமா?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக செந்தில் முருகன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

எனவே, அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்த சூழலில், ஒற்றைத் தலைமை விவகாரத்தால், அதிமுகவில் 1988ன் வரலாறு திரும்புகிறது என்று தான் பார்க்கப்படுகிறது. 1987ல் எம்ஜிஆர் மறைவுக்கு பின் கட்சியில் ஏற்பட்ட பிளவால், 1988 தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

இதனால், ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டை புறா சின்னத்திலும் களம் கண்டது. 35 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது. இந்த வேளையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தனித் தனி சின்னங்களில் போட்டியிட்டால், அது அதிமுகவிற்கு உள்ள வாக்கு வங்கியை பெருமளவில் சிதற வைக்கும் என மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

தங்கள் தரப்புக்கு சின்னம் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனுவிற்கு, சின்னம் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

இதையடுத்து இன்று நடைபெறவுள்ள விசாரணையில் உச்சநீதிமன்றம் ஏதேனும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமா? இரட்டை இலை சின்னத்தை முடக்குமா? என்ற அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர் அதிமுகவின் இரு தரப்பும், அவற்றின் தொண்டர்களும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments