Saturday, May 4, 2024
Homeஇந்திய செய்திகள்வெறும் ரூ.21க்கு ஒரு சவரன் தங்கம்.. 1920 முதல் தங்க நகை கடந்து வந்த பாதை...

வெறும் ரூ.21க்கு ஒரு சவரன் தங்கம்.. 1920 முதல் தங்க நகை கடந்து வந்த பாதை இதுதான்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடர் பண்டிகை காரணமாக தங்கம் விலை படிபடியாக உயர்ந்து வந்தது. இதையடுத்து கடந்த மாதம் 2 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தங்கம் விலை சவரனுக்கு 43,000 தாண்டியது.

கடந்த 31 ஆம் தேதி 42,704 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம், ஒன்றாம் தேதி 43,320 ரூபாயாக உயர்ந்தது. இந்த நிலையில், ஒரே நாளில், 720 ரூபாய் விலை உயர்ந்து வரலாறு காணாத வகையில் 44,040 ரூபாயாக அடைந்துள்ளது. நேற்று வரை ஒரு சவரன் ரூ.44ஆயிரம் என்றாலும் தங்கத்தில் வரலாறை பார்த்தால் நிச்சயம் நமக்கு ஒரு ஏக்கம் உண்டாகத்தான் செய்யும். 1920ம் ஆண்டு வெறும் ரூ21க்கு ஒரு சவரன் தங்கம் விற்பனையாகியுள்ளது. அதன்பின்னர் மெல்ல மெல்ல தங்கம் விலை ஏறியுள்ளது. அதன் வரலாறு இதோ!

ஆண்டுதங்கம் விலை
1920ரூ. 21
1961ரூ. 104
1978ரூ. 602
1980ரூ. 1,136
1987ரூ. 2,016
1996ரூ. 4000
1997ரூ. 3,400
2001ரூ. 3, 368
2006ரூ. 7,016
2008ரூ.10,048
2010ரூ. 15,488
2011ரூ. 22,104
2012ரூ. 25,600
2015ரூ. 21,424
2016ரூ. 23,880
2018ரூ. 24,192
2019ரூ. 30,104
2020ரூ. 43,328
2021ரூ. 37,000
2022ரூ. 41,040
2023  (பிப்ரவரி 2)ரூ. 44,040

கடந்த 2 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,336 ரூபாய் விலை உயர்ந்து, 44,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்னதாக 2020 ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் 43,360 க்கு விற்பனை செய்ததே உச்சபட்ச விலையாக இருந்தது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை 2,760 விலை அதிகரித்துள்ளது, மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தங்கத்தின் விலை 5 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர் நாகப்பன் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments