Thursday, May 2, 2024
Homeஉலக செய்திகள்இலங்கையரின் பரிதாப நிலை - உலக உணவுத் திட்டம் வெளியிட்டட முக்கிய தகவல்.

இலங்கையரின் பரிதாப நிலை – உலக உணவுத் திட்டம் வெளியிட்டட முக்கிய தகவல்.

பொருளாதார நெருக்கடி காரணமாக பல இலங்கையர்கள் கடன் வாங்க ஆரம்பித்துள்ளனர் அல்லது தங்களுடைய சேமிப்பை செலவழித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் பத்தில் ஏழு குடும்பங்கள் குறைவான உணவை உட்கொள்வது, பகுதி அளவைக் கட்டுப்படுத்துவது மற்றும் உணவின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்ற உணவு அடிப்படையிலான சமாளிக்கும் உத்திகளைக் கடைப்பிடிப்பதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம், தெரிவித்துள்ளது.

பத்தில் எட்டு குடும்பங்கள், கடன் வாங்குதல் அல்லது சேமிப்பைச் செலவழித்தல் போன்ற வாழ்வாதாரத்தை சமாளிக்கும் உத்திகளுக்குத் திரும்பியுள்ளதென ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

உணவுப் பாதுகாப்பு ஆய்வின்படி மூன்றில் ஒரு குடும்பம் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உலக உணவுத் திட்டம் கூறியது.

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் இதுவரை உலக உணவுத் திட்டத்திடம் உணவு மற்றும் பண உதவியைப் பெற்றுள்ளனர்.

ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்கள் பாடசாலை உணவைப் பெற்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments