Friday, May 17, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையில் அனைத்து பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் இனிப்பு பானங்கள் தடை!

இலங்கையில் அனைத்து பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் இனிப்பு பானங்கள் தடை!

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளிலும் இனிப்பு பானங்கள் மற்றும் கோதுமை மாவின் பாவனையை தடை செய்வதற்கும் அரிசி மாவின் பாவனையை அதிகரிப்பதற்கும் வேலைத்திட்டமொன்றை வகுக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை வகுக்க சுகாதார, கல்வி மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பள்ளி உணவகங்களில் கோதுமை மாவுக்குப் பதிலாக அரிசி மாவுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்தும், அரசு அலுவலகங்களில் செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கருத்தையே எடுக்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு பருவ மழையின் தாக்கத்தினால் 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் 400 மில்லியன் டொலர் செலவில் 08 இலட்சம் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments