Friday, May 3, 2024
Homeஅரசியல்செய்திஈரோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் மேனகா மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

ஈரோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் மேனகா மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கட்சியினரும் இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்து தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்ளிட்ட ஏழு பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது காவல்துறை.

நேற்று (பிப்ரவரி 2) ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா அனுமதியின்றி பேரணி நடத்தியதற்காக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுதல், அனுமதி பெறாமல் பேரணி செல்லுதல், கட்சியின் சின்னத்தை கையில் ஏந்தி பேரணி என மூன்று பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்தனர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை காவல்துறையினர்.

இன்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட வேட்பாளர்கள் சிலர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments