Wednesday, May 1, 2024
Homeசினிமாரஜினி, கமல் பட நடிகர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்!

ரஜினி, கமல் பட நடிகர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்!

தெலுங்கு திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி தமிழ், இந்தி மொழிகளில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் கே.விஸ்வநாத். இவர் இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து திரைப்படங்களை எடுத்து வெற்றி அடைந்தார்.

இவர் முதன்முதலாக 1965 ஆம் ஆண்டு அக்னேனி நாகேஸ்வரராவ் நடிப்பில் வெளியான ‘ஆத்ம கௌரவம்’ என்ற படத்தின் மூலமாக திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானார்.

அந்த திரைப்படம் பெரும் வெற்றி அடைந்ததால் தெலுங்கு துறையில் கவனிக்கத்தக்க இயக்குனராக வளர்ந்தார் கே.விஸ்வநாதன். ஏராளமான படங்களை இயக்கி சாதனைபடைத்துள்ளார்.

விஸ்வநாத் இயக்கிய சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய திரைப்படங்கள் இந்தியாவின் மிகச்சிறந்த திரைப்படங்களாக அறியப்படுகின்றன. இதில் சலங்கை ஒலி, சிற்பிக்குள் முத்து படங்களில் கமல்ஹாசன் நாயகனாக நடித்தார்.

மூன்று மொழிகளில் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியது மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கமல்ஹாசன் உடன் குருதிப்புனல், உத்தமவில்லன், அஜித்தின் முகவரி, விஜய்யின் புதிய கீதை, தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி உள்ளிட்ட திரைப்படங்களில் கே.விஸ்வநாத் நடித்திருக்கிறார்.

இயக்கம், நடிப்பு இரண்டிலும் தனித்துவம் கொண்ட கே.விஸ்வநாத் நடிகர் கமலுக்கு மிகவும் பிடித்த மனிதர். குறிப்பாக, நடிகர் கமல்ஹாசன் கடந்த பிறந்தநாள் அன்று கே. விஸ்வநாத்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அந்த புகைப்படத்தையும் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

1965இல் இருந்து சினிமா துறையில் இயக்குனர், நடிகர் என பிஸியாக இருந்த கே.விஸ்வநாதன், வயது மூப்பின் காரணமாக ஐதராபாத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் தன்னுடைய 92 ஆவது வயதில் கே.விஸ்வநாத் காலமானார். இவருடைய மறைவுக்கு இந்திய திரையுலகில் உள்ள பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கே.விஸ்வநாத் ஐந்து முறை தேசிய விருது பெற்றுள்ளார். அதேபோல் இந்திய அரசு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments