Monday, May 13, 2024
Homeஉலக செய்திகள்உளவு பார்த்து மொட்டை அடித்து தோளில் சுமந்து செல்லும் ஆப்ரிக்க திருமணங்கள்.. ஆச்சரியப்படுத்தும் சடங்குகள்!

உளவு பார்த்து மொட்டை அடித்து தோளில் சுமந்து செல்லும் ஆப்ரிக்க திருமணங்கள்.. ஆச்சரியப்படுத்தும் சடங்குகள்!

நம் ஊரிலேயே ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியான திருமண சடங்கு பின்பற்றப்படுகிறது. ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுகொண்டு வேறு சீர் செய்வார்கள்.

இப்படி இருக்க ஆப்ரிக்காவில் பையன் குடும்பமே சேர்ந்து பெண்ணை கடத்தி திருமணம் செய்து வைப்பது, கருவுற்ற பிறகு தான் திருமணம் என்று வகைவகையாக திருமணம் செய்துகொள்கின்றனர். அதே போன்ற ஒரு வித்தியாசமான திருமண சடங்குகளை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

உலகின் புகழ் பெற்ற விக்டோரியா ஏரியை அணைத்து அமைந்துள்ள உகாண்டாவில் நாட்டில் பெண் வீட்டாரை உளவு பார்த்து திருமண சம்பந்தம் செய்து கொள்கின்றனர். அது மட்டும் இல்லாமல் பாக்கிகா இனத்தவர்களுக்கிடையேயான திருமணம் அழுகையால் வகைப்படுத்தப்படுகிறது. ஒரு ஆடவன் தான் விரும்பும் பெண்ணை அடையாளம் கண்டவுடன், ஒகுரிமா என்ற செயல்முறை தொடங்குகிறது.

இது பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை உளவு பார்க்கும் வழக்கம் ஆகும். அவர்களின் குலம், அவர்களின் வரலாறு, பழக்கவழக்கம் போன்றவற்றைக் கண்டுபிடிப்பதை உள்ளடக்கியது தான் இது. நம்ம ஊரில் அக்கம் பக்கம் விசாரிப்பது போல தானே என்று கேட்கலாம். ஆனால் இதை அவர்கள் சீனாதானா 001 போல செய்கிறார்கள்.

எல்லாம் தெரிந்துகொண்ட பிறகு அந்த ஆணின் குடும்பம் பெண்வீட்டாரை அணுகி, மகளை திருமணம் செய்துவைப்பதற்கு கோரிக்கை விடுகின்றனர். அப்படி பெண் வீட்டார் சம்மதித்தால் திருமண ஏற்பாடுகளை செய்யத் தொடங்குகின்றனர். அதற்கு அடுத்தபடியாக ஒகுஜுகா எனப்படும் சம்ப்ரதாயம் நடக்கிறது.

இந்த சடங்கில் மணமகளை தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெண்ணின் தாய்மாமாவுக்கு ஒரு பசுவும், தந்தைக்கு செம்மறி ஆடுகளும் மணமகன் வீட்டில் இருந்து கொடுக்கவேண்டும். அதை பெற்றுக்கொண்டு பெண் வீட்டார் திருப்தி அடைந்தால் மட்டுமே தங்களது பெண்ணை கொடுப்பார்கள்.இதுவும் செவ்வனே நடந்துவிட்டால் அடுத்து ஒகுஹிங்கிரா விழா நடக்கும்.

இந்த திருவிழாவில் தான் மணமகனுக்கு, அதிகாரப்பூர்வமாக மணமகள் உரியவர் என்று வழங்கப்படுவார். இறுதியாக அவளுடைய குடும்பம் அவளுடைய தலையை மொட்டையடித்துவிடுகிறார்கள்.

அது மட்டும் அல்லாது, அவளுடைய சகோதரர் அவளை தோளில் தூக்கிக்கொண்டு அவளது புதிய வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு பையனின் குடும்பம் நல்ல கறி விருந்து வைத்துக் கொண்டாடும். ஆனால் அந்த கொண்டாட்டத்தின் இடையில் மணமகள் அழுகவேண்டுமாம். அது தான் அவர்களது பாரம்பரியமாம்.

அவள் அழும்போது மணமகன் தான் தான் அவளது புதிய எஜமானன் என்பதைக் காட்டிக்கொள்ள ஒரு மரக்கிளையை ஒடித்து கிளையால் அவள் தலையில் தட்டுவான். இது எல்லாம் முடிந்தால் தான் அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்தது என்று அர்த்தம் .

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments