Sunday, April 28, 2024
Homeதொழில்நுட்பம்’காலிங் ஷார்ட் கட்’... வாட்ஸ் அப்பில் வருகிறது புதிய அப்டேட்

’காலிங் ஷார்ட் கட்’… வாட்ஸ் அப்பில் வருகிறது புதிய அப்டேட்

பயனர்களின் வசதிக்காக மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் கால் செய்யும் அனுபவத்தை மேலும் எளிதாக்க புதிய ஷார்ட் கட் ஆப்சனை விரைவில் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் உடனடி மெசேஜிங் தளமான வாட்ஸ் அப்பில் புதிய புதிய அப்டேட்டுகளை வழங்கிக் கொண்டே வருகிறது மெட்டா நிறுவனம். அந்த வகையில் புதிய அப்டேட்டுக்கு தயாராகி வருகிறது.

அது தான் வாட்ஷ் அப் காலிங் ஷார்ட் கட். அதாவது இனி வாட்ஸ் கால் செய்ய வாட்ஸ்அப் செயலியை திறக்க வேண்டியதில்லை.

அண்மையில் வாட்ஸ் அப் பயனர்களின் ரகசியம் மற்றும் பிரைவசியை காப்பதற்காக பல்வேறு பிரைவசி டூல்களை அறிமுகம் செய்திருந்தது மெட்டா நிறுவனம். தற்போது காலிங் அனுபவத்தை எளிதாக்கும் புதிய ஆப்சனை வழங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது அந்த நிறுவனம்.

மெட்டா நிறுவனம் தொடர்பான அப்டேட் செய்திகளை வெளியிடும் வாட்ஸ்அப் பீட்டா தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்த செய்தி உறுதியாகியுள்ளது. அதாவது, நாம் அடிக்கடி சாட் செய்யும் அல்லது கால் செய்யும் தொடர்பு எண்ணை வாட்ஸ் அப்பில் டேப் செய்த உடன், காலிங் ஷார்ட் கட் ஆப்சனில் இணைக்கவா என்கிற பாப் அப் மெனு தோன்றும்.

நாம் அனுமதி கொடுத்து விட்டால் நமது ஸ்கிரீனில் அதற்கான தேர்வு வந்து விடும். அதன் பிறகு வாட்ஸ் அப் கால் செய்வதற்கு நாம் வாட்ஸ் அப்பை திறக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆப்சன் மூலம் மிக எளிமையாக வாட்ஸ் அப் கால் செய்யும் வசதி நமக்கு கிடைக்கிறது.

தற்போது இந்த வசதி தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக ஆண்ட்ராய்டு பீட்டா டெஸ்டர்களுக்கு மடடுமே வழங்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் பயன்படுத்தி, நிறை குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்த பிறகு பொதுப் பயனர்களுக்கு இந்த வசதி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே இதே போன்ற ஒரு ஷார்ட்கட் அம்சம் வாட்ஸ்அப் சாட்களுக்கு உள்ளது.

அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வாட்ஸ்அப் சாட்-ஐ உங்கள் மொபைல் போனின் ஹோம் ஸ்க்ரீனில் ‘பின்’ செய்து வைத்துக்கொள்ள முடியும். அதன் மூலம், வாட்ஸ்அப்பை திறக்காமலேயே குறிப்பிட்ட சாட்டின் வழியாக மெசேஜ்களை அனுப்பவும் படிக்கவும் முடியும். அதை மேலும் எளிமையாக்குவது தான் இனி அறிமுகமாக உள்ள வாட்ஸ் அப் கால் ஷார்ட் கட் ஆப்சன்.

இது போன்ற எண்ணற்ற அப்டேட்டுகளை தொடர்ந்து வழங்க தனது பயனர்களை திருப்தியாக்குவதுடன், மேலும், மேலும் பயனர்களை பெற்று வருகிறது மெட்டா நிறுவனம். இந்த புதிய அப்டேட் வருவதை மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் வாட்ஸ் அப் பயனர்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments