Saturday, April 27, 2024
Homeஇலங்கை செய்திகள்'கணவனை கொன்ற பாவி நான்': கள்ளக்காதலால் 34 வருடங்களின் முன் கணவரை கொன்ற மனைவி கதறல்!

‘கணவனை கொன்ற பாவி நான்’: கள்ளக்காதலால் 34 வருடங்களின் முன் கணவரை கொன்ற மனைவி கதறல்!

“அவர் என்னிடம் ஒரு சாராயப் போத்தலைக் கொண்டு வந்து தந்து, கணவரைக் கொல்லச் சொன்னார். அதனால் நான் அவரைக் கொன்றேன்.”- இவ்வாறு வாக்குமூலமளித்துள்ளார் 34 வருடங்களுக்கு முன்னர் தனது களக்காதலியின் கணவரைக் கொன்றதாக குற்றம்சட்டப்பட்டுள்ள இரண்டு பிள்ளைகளின் தந்தை.

நேற்று (17) மொரவக நீதவான் துமிந்த பஸ்நாயக்க முன்னிலையில் சாட்சியமளித்த போது இதனை தெரிவித்தார்.

இந்தக் குற்றச் செயல் தொடர்பில் என்ன கூறுகிறீர்கள் என சந்தேகநபரிடம், நீதவான் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

34 வருடங்களுக்கு முன்னர் அன்னசிகலவத்தை, டொலமுல்ல, ஊர்பொக்கவில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 51 வயதான கபுகே ஜினதாச படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைக்யின் போதே இதனை தெரிவித்தார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் மொரவக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 69 வயதுடைய ஜி.சோதாச என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையும், 83 வயதுடைய டபிள்யூ.ஜி.ரோசலின் என்ற 3 பிள்ளைகளின் தாயும் நேற்று (17) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

நீதவான் விசாரணை தொடங்கியதும், சந்தேகநபரிடம் இது தொடர்பாக ஏதாவது சொல்ல விரும்பகிறீர்களா என நீதவான் கேட்டார்.

69 வயதான ஆண் சந்தேகநபர், “நான் செய்த குற்றத்தின் தண்டனை நான் இறக்கும் நேரத்தில் எனக்கு வழங்கப்படுகிறது” என்று கூறினார்.

இது தொடர்பில் சந்தேகநபரிடம் நீதவான் வினவியபோது, ​​“அவராலேயே இந்தக் குற்றம் இடம்பெற்றுள்ளது. அவர் எனக்கு குடிக்கக் கொடுத்தார், அவரைக் கொல்லச் சொன்னார். அதன் பிறகு, அடக்கம் செய்ய வேண்டிய இடத்தை அவரே காட்டினார். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த சம்பவம் தொடர்பில் மொரவக்க பொலிஸார் நீதிமன்றில் பி அறிக்கை சமர்ப்பித்ததுடன், பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கொலை செய்யப்பட்ட ஜினதாசவின் மூத்த மகனும் இதில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன்படி கடந்த 15ஆம் திகதி உயிரிழந்தவர் புதைக்கப்பட்ட இடத்தை பரிசோதிக்க நீதவானுடன் சென்ற பொலிஸார், அங்கு உரிய மலசலகூட குழி தோண்டப்பட்டு ஒன்பது அடிக்கு கீழே இருந்து உடல் பாகங்கள் மீட்கப்பட்டதாக நீதிமன்றில் அறிவித்தனர்.

மேலும் பல எலும்பு துண்டுகள், பற்கள், உடலில் சுற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துணி துண்டுகள், இரண்டு சாரம், இரண்டு திரைச்சீலைகள் கொண்ட ஜன்னல் துணி, மூன்று தலையணை உறைகள், சாணத் துண்டுகள், ஒரு டி-சர்ட் மீட்கப்பட்டதாகவும் போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த பாகங்கள் மீட்கப்பட்டபோது, ​​சந்தேகநபர் இவை தனது கணவருடையது என அடையாளப்படுத்தியதாகவும், தனது கணவரைக் கொன்று புதைத்ததைக் கூறி கதறி அழுததாகவும் பொலிசார் நீதிமன்றில் தங்களின் பி அறிக்கையில் உண்மைகளை தெரிவித்திருந்தனர்.

1989 ஆம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியின் போது- தற்போது 83 வயதான பெண்ணின் கணவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவரின் மனைவிக்கும், மற்றொருவருக்குமிடையில் ஏற்பட்ட கள்ளக்காதலே இந்த கொலைக்கு காரணமானது.

கள்ளக்காதலை கைவிடுமாறு கணவர் கோரியதால் ஆத்திரமடைந்த மனைவி, கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை அடித்துக் கொன்று மலசலக்கூட குழிக்குள் போட்டு மூடினார் என்ற உண்மைகளையும் பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்தனர்.

சந்தேக நபர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், சக்கர நாற்காலியின் உதவியுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம் சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் வழக்கை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments