Tuesday, April 30, 2024
Homeஇந்திய செய்திகள்காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூரி இளம் பெண்ணிடம் பணம் பரித்த கும்பல் …இணையதளம் மூலம்...

காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூரி இளம் பெண்ணிடம் பணம் பரித்த கும்பல் …இணையதளம் மூலம் ஏமாற்றிய பஞ்சாப் ஆசாமிகள்.

சென்னையைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தன்னுடன் படித்த ஒருவரை காதலித்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவருடனான தொடர்பு விட்டுபோன நிலையில், தனது காதலனுடன் சேர  இணையதளங்களில் இதற்காக தீர்வு தேடினார். அப்போது “How to bring back Ex”என்ற செயலி, காதலில் தோல்வி அடைந்த அல்லது காதல் நிறைவேறாத இளைஞர்களுக்கு உதவி செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அடுத்து சென்னை இளம் பெண், அந்த இணையதள செயலியில் தனது பெயரை பதிவு செய்து, தனது காதலன் பற்றியே விவரங்களையும் தெரிவித்தார்.

இதை அடுத்து அந்த இளம் பெண்ணை இணையதளம் மூலமாக தொடர்பு கொண்ட, இரண்டு பேர் சென்னை விமான நிலையம் வரும்படி கூறினர். இந்த இளம் பெண்ணும் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு வந்த இரு இளைஞர்கள், நாங்கள் உங்கள் காதலரோடு உங்களை சேர்த்து வைத்து விடுகிறோம். ஆனால் கொஞ்சம் செலவு அதிகமாகும் என்று பணம் அல்லது தங்க நகை கேட்டனர். இந்த இளம் பெண் 40 சவரன் தங்க நகைகளை, சென்னை விமான நிலையத்தில் வைத்து, அவர்களிடம் கொடுத்தார்.

தங்க நகைகளை வாங்கிச் சென்ற அந்த இரு இளைஞர்கள், அவர்கள் கூறிய நாட்களுக்குள் இளம் பெண்ணை, காதலனோடு இவரை சேர்த்து வைக்கவில்லை. இதற்கு மாறாக அந்த இளைஞர்கள் இந்த இளம்பெண்ணை தொடர்பு கொண்டு, நீ கொடுத்த நகைகள் போதுமானது அல்ல. மேலும் ஐந்து லட்சம் ரூபாய் பணம் வேண்டும். இல்லையென்றால் உன்னை பற்றி அவதூறாக இணையதளங்களில் செய்திகளை பரப்பி விடுவோம் என்று மிரட்டினர். இதனால் பதறிப் போன இளம் பெண், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்.

அதன்பின்பு சென்னை விமான நிலைய போலீஸ் நிலையம் வந்து தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கண்ணீரோடு புகார் எழுதிக் கொடுத்தார். அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இணையதள முகவரியை ஆய்வு செய்த போது, அது பஞ்சாப் மாநிலத்தின் இருப்பது தெரியவந்தது. எனவே போலீசார் அந்த இளம் பெண்ணை வைத்து அந்த இளைஞர்களை தொடர்பு கொள்ள செய்தனர். அந்த இளம் பெண் அந்த இளைஞர்களிடம், ஏற்கனவே நான் நகைகளை கொடுத்த அதே சென்னை விமான நிலையத்திற்கு வந்தால், நீங்கள் கேட்ட பணம் நான் கொடுக்கிறேன் என்று பேசச் செய்தனர். அந்த இளைஞர்களும் சென்னை வருவதாக கூறினர்.

இதனை தொடர்ந்து அந்த இளைஞர்கள் இருவரும்  விமானம் மூலம் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையம் வந்தனர். போலீசார் சென்னை விமான நிலையத்தில், இளம் பெண்ணை தனியே நிறுத்தி, அந்த இளைஞர்களிடம் பேசச் செய்தனர். அதோடு சாதாரண உடை அணிந்த போலீசார், பயணிகள் போல் நடித்து கண்காணித்துக் கொண்டு இருந்தனர். இளம் பெண் பணம் தரப் போகிறார் என்ற சந்தோசத்தில் பஞ்சாபில் இருந்து விமானத்தில் வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அனில் குமார் (27), ககன்தீப் பார்கவ் (33) ஆகிய இரு இளைஞர்கள் வந்து, இளம் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த போது, சாதாரண உடை அணிந்த போலீசார் சுற்றி  வளைத்து பிடித்து கைது செய்து, சென்னை விமான நிலைய போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

அங்கு வைத்து தீவிர விசாரணை நடத்திய போது, இவர்கள் இதைப்போல் இந்த போலியான இணையதளத்தை தொடங்கி இளம் பெண்களையும் இளைஞர்களையும் ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. இதை அடுத்து இரண்டு பேரையும் கைது செய்தனர். அதோடு அவர்களிடமிருந்து பணம், ரூபாய் 8.5 லட்சம், 54 கிராம் தங்க செயின்கள் பறிமுதல் செய்தனர்.

இதற்கு பிறகு இரண்டு பேர் மீதும் சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் இருவரையும் விரைவில் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments