Friday, May 3, 2024
Homeசினிமாவிட்லிகோ நோயால் பாதிக்கப்பட்ட நடிகை மம்தா மோகன் தாஸ்…!!இது என்ன நோய்?இந்த நோயினால் வரும் பாதிப்புகள்...

விட்லிகோ நோயால் பாதிக்கப்பட்ட நடிகை மம்தா மோகன் தாஸ்…!!இது என்ன நோய்?இந்த நோயினால் வரும் பாதிப்புகள் என்ன?

விவாகரத்து பிரச்னைகளிலிருந்து மீண்டு வந்து திரைப்படங்களில் பரபரப்பாக நடித்துவந்த சமந்தாவை மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோய் வெகுவாக பாதித்துள்ளது. சமீபத்தில் யசோதா படம் தொடர்பாக அளித்த பேட்டியில், ”நல்ல நாட்களும் மோசமான நாட்களும் என் வாழ்க்கையில் மாறி மாறிவருகின்றன. சில நாட்கள் படுக்கையிலிருந்து எழுவது கூட சிரமமாக இருக்கும். சில நாட்கள் எனக்கு இருக்கும் பிரச்னைகளை எதிர்த்து நான் போராட விரும்புவேன்” என்று சமந்தா குறிப்பிட்டிருந்தார்.

அந்த வரிசையில் மற்றொரு நடிகையான  மம்தா மோகன்தாஸ் தோல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மலையாள திரையுலகில் அறிமுகமாகி தமிழில் சிவப்பதிகாரம், தடையறத் தாக்க, குரு என் ஆளு உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் மம்தா மோகன்தாஸ்.

விட்லிகோ என்ற சரும நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் மம்தா. ஆட்டோ இம்யூன் பாதிப்பால் ஏற்படும் இந்த நோயின் தாக்கம் என்பது சரும நிறத்திற்கான முக்கிய காரணியான மெலனின் படிப்படியாக குறைவதால், தோலின் நிறம் முழுவதுமாக இழக்கும் அபாயம் உருவாகும். எந்த வகை சருமம் கொண்டவரையும் இந்த நோய் தாக்கக் கூடும்.

இது தொடர்பாக தனது செல்பியை பதிவிட்டு விட்லிகோ தொடர்பான பாதிப்பையும் குறிப்பிட்டுள்ளார் மம்தா மோகன் தாஸ். தனது நிறத்தையும், அழகையும் இழந்து வருகிறேன் என்றும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது உங்களது அன்பை வேண்டுகிறேன் என்றும் உருக்கமாக இன்ட்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மம்தா.

ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்த மம்தா, ஹாட்ஜ்கின் லிம்போமா என்ற ஆட்டோ இம்யூன் நோயையும் எதிர்கொண்டார். அதன் தொடர்ச்சியாக தற்போது ஆட்டோ இம்யூன் டிசீஸ் எனப்படும் விட்லிகோவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

அரிதான சரும குறைபாடு என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படும் விட்லிகோ பரவக்கூடியது அல்ல என்றும், நாளடைவில் சருமத்தில் உள்ள திட்டுக்கள் அதிகரிக்கும் வகையிலான Progressive Condition கொண்டது என்றே கூறப்படுகிறது.

தலை, கண், வாய் பகுதிகளில் உடனடியாக தென்படும் தோல் நிற மாற்றங்கள் நாளடைவில் வெண் திட்டுக்களாக மாறும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். கார்டிகோ ஸ்டீராய்டுகள், போட்டோதெரபி எனப்படும் ஒளிக்கதிர் சிகிச்சை, உடலின் வேறு பாகத்தில் இருந்து எடுத்து ஒட்டப்படும் தோல் என சில சிகிச்சைகள் மட்டும் தற்போது விட்லிகோவுக்கு மேற்கொள்ளப்படுகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments