Monday, May 6, 2024
Homeஉலக செய்திகள்கொரோனா பாதித்த நண்பர்களை சென்று சந்தித்து தனக்கு தானே கொரோனவை வர வளைத்து கொண்ட சீன...

கொரோனா பாதித்த நண்பர்களை சென்று சந்தித்து தனக்கு தானே கொரோனவை வர வளைத்து கொண்ட சீன பாடகி..பொறுப்பற்ற செயலுக்கு மக்கள் கண்டனம்

சீனாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பி.எப்.7 ஒமைக்ரான் என்ற வகை வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சீனாவின் பிரபல பாடகி ஒருவர் தனக்குத் தானே கொரோனாவை வரவழைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஜேன் ஜாங் சீனாவின் பிரபல பாடகியும், பாடலாசிரியருமான ஜேன் ஜாங் (38) ஆங்கில வருடப் பிறப்பையொட்டி டிசம்பர் 31-ந் தேதி இரவு இசை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதையடுத்து இசை நிகழ்ச்சியில் பங்கேற்றால் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று கருதிய அவர் கொரோனா பாதித்த தனது நண்பர்களை வேண்டுமென்றே அவர்கள் சிகிச்சைபெறும் மையங்களுக்கு சென்று சந்தித்து உள்ளார்.

ஜேன் ஜாங் இதனால் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சமூக வலதைளங்களில் தெரிவித்துள்ளார். சீன சமூக வலைதளங்களில் 4.3 கோடி பின் தொடர்பவர்களை கொண்டிருக்கும் ஜேன் ஜாங் இந்த பொறுப்பில்லாத செயலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஏற்கனவே சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மிக மோசமாக உள்ள நிலையில் பிரபலமான பாடகியே இப்படி செய்ததற்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாடகி ஜேன் ஜாங் தனது பதிவு களை அழித்துவிட்டு, தான் செய்ததற்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments