Sunday, May 5, 2024
Homeசினிமாதுணிவு திரைப்படத்தின் அடுத்த அப்டேட்.. . அதீத ஆனந்தத்தில் அஜித் ரசிகர்கள்.

துணிவு திரைப்படத்தின் அடுத்த அப்டேட்.. . அதீத ஆனந்தத்தில் அஜித் ரசிகர்கள்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.
துணிவு இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் ‘சில்லா சில்லா’ மற்றும் ‘காசேதான் கடவுளடா’ பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலானது.துணிவு போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘துணிவு’ படத்தின் மூன்றாவது பாடல் ‘கேங்ஸ்டா’ என்று அறிவித்துள்ள படக்குழு. இந்த பாடலுக்கான லிரிக்ஸையும் வெளியிட்டுள்ளது. மேலும், ‘கேங்ஸ்டா’ பாடல் வருகிற டிசம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அப்டேட்டால் ரசிகர்கள் அடுத்த குத்தாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments