Friday, May 3, 2024
Homeவிளையாட்டுடி20 உலக கோப்பையில் முற்றிலும் இளம் படையை வைத்து அணியை உருவாக்க உள்ளோம்…கோலி, ரோகித் கிடையாது?-பயிற்சியாளர்...

டி20 உலக கோப்பையில் முற்றிலும் இளம் படையை வைத்து அணியை உருவாக்க உள்ளோம்…கோலி, ரோகித் கிடையாது?-பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அதிக நோ பால்களை வீசியதால் தான் தோல்வியை தழுவியது. ஆனால் இது குறித்து பேசிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இளம் வீரர்களை கொண்டு விளையாடுவதால் இப்படி தோல்விகளை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளரிடம் பேசிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் , எஙகள் அணி முற்றிலும் இளம் வீரர்களை கொண்டது. கடந்த டி20 உலககோப்பையில் இங்கிலாந்திடம் அரையிறுதியில் நாங்கள் தோற்றோம். தற்போது நீங்கள் பார்த்தீர்கள் என்றால் வெறும் 3,4 வீரர்கள் தான் அந்த போட்டியில் விளையாடிய வீரர்கள் தற்போது இடம் பெற்று இருக்கிறார்கள்.

அதிக கவனம் அடுத்த டி20 உலக கோப்பையில் முற்றிலும் இளம் படையை வைத்து நாங்கள் இந்திய அணியை உருவாக்க உள்ளோம். இதனால் அனுபவம் இல்லாத வீரர்கள் விளையாடும் போது, இது போன்ற தவறுகள் நடக்க தான் செய்யும். தற்போது ஒருநாள் போட்டிக்கான உலககோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மீது தான் அதிக கவனம் உள்ளது. இதனால் இளம் வீரர்கள் டி20 போட்டியில் விளையாடுகிறார்கள். பொறுமையாக இருங்க யாரும் வேண்டுமேன்றே நோ பால், ஓயிடு பந்துகளை எல்லாம் வீச மாட்டார்கள்.

அப்போது செயதால் நமக்கு தான் பின்னடைவு என்று விளையாடும் அனைவருக்கும் தெரியம். இந்த இளம் வீரர்கள் மீது கொஞ்சம் பொறுமை காப்பது தான் சிறந்தது. நாங்கள் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல ஆதரவு கொடுக்கிறோம். இப்படி தவறுகளை செய்யாமல் இருக்க பயிற்சி வழங்குகிறோம். ஆனால் இளம் வீரர்கள் தவறு செய்வார்கள் என்பதை புரிந்த கொள்ள வேண்டும். சிவம் மவிக்கு பாராட்டு இந்திய டி20 அணியில் பேட்டிங் செய்யக் கூடிய வேகப்பந்துவீச்சாளர்கள் என்றால் ஹர்தக் பாண்டியா மட்டும் தான் இருக்கிறார்.

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சிவம் மவியும் பொறுப்பை எடுத்து கொண்டு விளையாடியதை பார்க்கும் போது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. ஜடேஜா காயம் காரணமாக தற்போது நிறைய போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் அக்சர் பட்டேல் அந்த இடத்தை பூர்த்தி செய்து வருகிறார். அக்சர் பட்டேல் அக்சர் பட்டேலின் பேட்டிங் பல மடங்கு முஙனனேறி உள்ளது. பந்துவீச்சு போல் பேட்டிங்கிலும் அவர் தனியாக உழைத்து வருகிறார். இதே போன்று திரிபாதியும் பல உள்ளூர் போட்டியில் விளையாடிய பிறகு இங்கு வந்திருக்கிறார்கள்.

அவருக்கும் அணியில் அதிக வாய்ப்பு கொடுத்து சோதிக்க வேண்டும். நிச்சயம் இந்தப் போட்டியின் மூலம வீரர்கள் நிறையாக கற்று கொள்வார்கள் என நம்புகிறேன். இளம் வீரர்களுக்கு இது நல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று டிராவிட் கூறினார். டிராவிட் இளம் வீரர்கள் குறித்து பேசி வருவதால் இனி சீனியர்களுக்கு டி20 போட்டியில் இடம் கிடைக்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments