Sunday, April 28, 2024
Homeசினிமாதனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் துஷாரா விஜயன்?

தனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் துஷாரா விஜயன்?

தனுஷ் இயக்கும் படத்தில் நடிகை துஷாரா விஜயன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ் தனது இரண்டாவது படத்தை இயக்க தயாராகிவிட்டார் என முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். விஷ்ணு விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ள இப்படத்திற்கு D50 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே நட்சத்திரம் நகர்கிறது படத்தில் கடைசியாக நடித்த துஷாரா விஜயன் தனுஷ் இயக்கும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை உறுதி செய்ய அவரை அணுக முயற்சித்தபோது, துஷாராவுக்கு நெருக்கமான வட்டாரம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியதாக முன்னணி ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது. படத்தில் அவரின் கேரக்டர் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் முக்கிய வேடங்களில் நடிக்க காளிதாஸ் ஜெயராம் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் வட சென்னையை மையமாக வைத்து எடுக்கப்படுவதாகவும், நீட்டிக்கப்பட்ட கேமியோவில் தனுஷ் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும், தனுஷ், பிரியங்கா மோகன், ஜான் கொக்கன், சந்தீப் கிஷன் ஆகியோர் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தை முடித்த பிறகு D50 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனக் கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments