Sunday, April 28, 2024
Homeதொழில்நுட்பம்தமிழகத்தில் கூடுதல் பகுதிகளில் 5 ஜி சேவை தொடக்கம்….16 நகரங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூடுதல் பகுதிகளில் 5 ஜி சேவை தொடக்கம்….16 நகரங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

அதிவேக ஜியோ 5 ஜி இணையச் சேவை இன்று தமிழ்நாட்டின் திருப்பூர் உட்பட 16 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்தியாவில் மொத்தம் 134 நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது.

அண்மையில், தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி உட்பட 6 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அதிவேக சேவையை வழங்கும் ஜியோ நிறுவனம் இன்று (ஜனவரி 17) 7 மாநிலத்தில் 16 புதிய நகரங்களில் ட்ரு 5ஜி சேவையைத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் திருப்பூர், ஆந்திரா மாநிலத்தில் காக்கிநாடா, கர்னூல் நகரங்களில், அசாமில் சில்சார் நகரத்தில், கர்நாடக மாநிலத்தில் ஷிவமொக்கா, தாவணகெரே, ஹோஸ்பேட், பிதார், கடக்-பேத்தகிரி ஆகிய நகரங்களிலும், கேரளாவில் கன்னூர், கொட்டயம், பாலக்காடு நகரங்களிலும், தெலுங்கானாவில் கம்மம், நிஜாமாபாத், உத்தரப்பிரதேசத்தில் பரேலி ஆகிய நகரங்களில் இன்று ஜியோ 5 ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதனுடன் மொத்தம் 134 நகரங்களில் சேவையைத் தொடங்கி அதிக நகரங்களில் 5ஜி சேவையை வழங்குகின்ற ஒரே நிறுவனமாக ஜியோ உருவெடுத்துள்ளது. மேலும் இந்த நகரங்களிலுக்கு Jio’s Welcome Offer அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்பரில் வாடிக்கையாளர்கள் 1 Gbps வேகத்தில் அளவற்ற இணையச் சேவையை அனுப்பவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவில் 5 ஜி சேவை வழங்கப்படும் நகரங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்களுக்கு Jio’s Welcome Offer பெறுவதற்கான இணைப்பு அனுப்பப்படும்.

அதன் மூலம் ரூ.239 திட்டம் அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1 Gbps வேகத்தில் அளவற்ற 5ஜி சேவை எந்தவித கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படும்.

ஜியோவின் அதிவேக இணையச் சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் இ-கவர்ணஸ், கல்வி, அட்டோமொபைல், ஏஐ, இணைய விளையாட்டு, உடல்நலம், விவசாயம், ஐடி போன்ற பகுதிகளில் உள்ள வாய்ப்புகளினால் பயன்பெற்று வளர்ச்சி அடைய முடியும்.

மேலும் இது குறித்து ஜியோ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஜியோ 5 ஜி சேவையைத் துரிதமாக வளர்ச்சியடைய உறுதுணையாக இருந்த மாநிலங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 700 MHz,3500 MHz மற்றும் 26 GHz பேண்ட்களில் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு 700 MHz பேண்டில் sub-GHz spectrum வழங்கும் ஒரே நிறுவனமாக ஜியோ செயல்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments