Friday, May 17, 2024
Homeஇந்திய செய்திகள்“தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை விரைவில் வழங்கப்படும்” -நிர்மலா சீதாராமன்.

“தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை விரைவில் வழங்கப்படும்” -நிர்மலா சீதாராமன்.

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 4,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றார். இது தொடர்பாக பேசிய அவர், “பல்வேறு வகைகளில் ரூ.15,000 கோடிக்கு மேல் தமிழ்நாட்டிற்கு நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளது. இதனால் மாநிலத்திற்கு நிதிச்சுமை ஏற்படுகிறது. எதன் அடிப்படையில் பணம் விடுவிக்கப்படுகிறது?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆடிட் ஜெனரல் சான்றிதழ் அளித்தால் பணம் உடனடியாக விடுவிக்கப்படுகிறது என்றார். “தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ,4000 கோடியை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்த தொகை விடுவிக்கப்படும்” என தெரிவித்தார்.

மேலும் 2022 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தில் மாநிலங்களுக்கு 86 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments