Saturday, May 4, 2024
Homeஇந்திய செய்திகள்தமிழ் நாட்டில் பெட்ரோல் விலை குறையாது ! அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முக்கிய விளக்கம்…அதிருப்தி...

தமிழ் நாட்டில் பெட்ரோல் விலை குறையாது ! அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முக்கிய விளக்கம்…அதிருப்தி அடைந்த MLAகள் வெளிநடப்பு..

டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை. இது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முக்கிய விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை என்பது சர்வதேச சந்தையை அடிப்படையாக வைத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலைகளை பொதுத்துறை நிறுவனங்களே மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

இருப்பினும், கடந்த பல மாதங்களாகவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படவில்லை. கச்சா எண்ணெய் விலை இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

மாறவே இல்லை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 110 டாலர் வரை சென்றது. இருப்பினும், அப்போதும் விலை ஏற்றப்படவில்லை. கொரோனா பாதிப்பால் விலைவாசி ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், பெட்ரோல்- டீசல் விலையேற்றம் விலைவாசி உயர்வை மேசமாக்கும் என்பதால் விலை உயர்த்தப்படவில்லை. இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பெட்ரோல் விலை மாற்றம் இல்லாமலேயே இருந்தது. இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 80 டாலராக உள்ள நிலையிலும், பெட்ரோல் டீசல் விலை ஒரு பைசா கூட குறையவில்லை.

அமைச்சர் விளக்கம்

இப்போது நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று லோக்சபாவில் கேள்வி எழுப்பினர். இதற்கு பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விரிவான பதிலைக் கொடுத்துள்ளார். உலகின் மற்ற நாடுகளில் பெட்ரோல், டீசல் விலையைப் பட்டியலிட்ட அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இந்தியாவில் தான் ஒப்பீட்டளவில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளதாகத் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டிருந்த நிலையில், ஹர்தீப் சிங் பூரி இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

தமிழகம் உட்பட 6 மாநிலங்கள் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், “மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியைக் குறைத்துள்ளது. அதேபோல சில மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வாட் எனப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட வரியை (வாட்) குறைத்துள்ளது. ஆனால், இன்னுமே கூட பாஜக ஆட்சியில் இல்லாத ஆறு மாநிலங்கள்- மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, ஜார்கண்ட் மாநிலங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட வரியைக் குறைக்கவில்லை. இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. எதிர்க்கட்சி எம்பிகள் இந்த மாநிலங்களிடம் வரியைக் குறைக்கச் சொல்லி கேட்க வேண்டும்.

Read more at: https://tamil.oneindia.com/news/delh

குறைந்த விலையேற்றம் 2020 நவ. முதல் 2022 நவ. வரை ஒப்பீட்டால் கச்சா எண்ணெய் விலை 43 டாலரில் இருந்து 87 டாலர் வரை, அதாவது 102% உயர்ந்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் சில்லறை விற்பனையில் பெட்ரோல் விலை வெறும் 18.95%, டீசல் விலை 26.5% மட்டுமே உயர்ந்துள்ளது. உலகளவில் நாம் ஒப்பீட்டாலும் இந்தியாவில் தான் பெட்ரோல், டீசல் விலை மிகக் குறைவாக உள்ளது. அமெரிக்காவில் பெட்ரோல் 83 ரூபாய்க்கும் டீசல் 113 ரூபாய்க்கும், பிரிட்டனில் பெட்ரோல் 152 ரூபாய்க்கும் டீசல் 171 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயரவில்லை இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது.. எனவே, சர்வதேச சந்தைக்கு ஏற்பவே பெட்ரோல், டீசல் விலை மாறும். இது தவிரக் கச்சா எண்ணெய் கொள்முதல் விலை, இந்திய ரூபாய் மதிப்பு விகிதம், கப்பல் போக்குவரத்து கட்டணம், சுத்திகரிப்பு செலவு, டீலர் கமிஷன், மத்திய மாநில அரசுகளின் வரிக்கள் என பல்வேறு விஷயங்களைப் பொறுத்தே பெட்ரோல், டீசல் விலை மாறும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உச்சம் தொட்ட போதிலும், இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை.

கடும் நஷ்டம் இதன் காரணமாக இந்தியாவின் மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் கடும் நஷ்டத்தைச் சந்தித்து உள்ளன. இந்தாண்டு மட்டும் அரசு பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ. 27 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் விலை உயர்வால் இந்தியர்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக 2021 நவ.21 மற்றும் 2022 மே 22 என இரண்டு முறை மத்திய அரசு வரியைக் குறைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியில் 13 ரூபாயும் டீசல் மீதான வரியில் 16 ரூபாயும் குறைத்துள்ளது. சில மாநிலங்களில் இன்னுமே வாட் வரியைக் குறைக்கவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

கேஸ் சிலிண்டர்

அதேபோல எல்பிஜி எனப்படும் கேஸ் சிலிண்டர்களில் இந்தியா தனது தேவையில் சுமார் 60% இறக்குமதியே செய்கிறது. சவுதி ஒப்பந்த விலை அடிப்படையில் தான் நாட்டில் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ஏப்ரல் 2020இல் 236 டாலரில் இருந்து 2022 ஏப்ரலில் 952 டாலராக உயர்ந்தது. இருப்பினும், நமத நாட்டில் மக்கள் நலன் கருதி அந்தளவுக்கு விலை உயர்த்தப்படவில்லை. கேஸ் சிலிண்டர் விற்பனையிலும் பொதுத் துறை நிறுவனங்கள் பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. இதில் இருந்து விடுபட மத்திய அரசு ரூ.22,000 கோடியை இழப்பீடாக அளித்துள்ளது” என்றார். இருப்பினும், அமைச்சரின் பதிலில் திருப்தி அடையாத காங்கிரஸ், திமுக, திரிணாமுல், என்சிபி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments