Thursday, May 2, 2024
Homeஇந்திய செய்திகள்நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலை..!!!அதிர்ச்சியில் பொதுமக்கள்...

நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலை..!!!அதிர்ச்சியில் பொதுமக்கள்…

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடர் பண்டிகை காரணமாக தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. ஜனவரி மாதம் இறுதியில் தங்கம் விலை சில நாட்கள் ஏறுவதும், சில நாட்கள் இறங்குவதுமாக இருந்து வந்தது.

பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தங்கம் மீதான வரி அதிகரிக்கப்பட்டதால் தங்கம் விலை ஏறுமுகமாக உள்ளது.இந்த நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. 

சென்னையில் 24 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 5745 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் உயர்ந்து 45,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து 5,383 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்து 42,984 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி கிராம் 74 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை 74,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments