Saturday, May 4, 2024
Homeஇந்திய செய்திகள்பரோட்டா போடுவதற்கு பயிற்சி வகுப்பு… மதுரையில் தொடங்கப்பட்ட வகுப்புகள்..

பரோட்டா போடுவதற்கு பயிற்சி வகுப்பு… மதுரையில் தொடங்கப்பட்ட வகுப்புகள்..

சென்னை: உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியில் ஹனுமான் காட் பகுதியில் பாரதியார் வாழ்ந்த இடத்தில் பாரதியாரின் சிலையைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்திய விடுதலைக்காகப் போராடியவர்களில் மிகவும் முக்கியமானவர் மகாகவி பாரதியார். இவர் தனது பாடல்கள் மூலம் விடுதலை உணர்வை மக்களிடையே எடுத்துச் சென்றார். மகாகவி பாரதியாரின் 141ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

மதுரை: மதுரையில் பரோட்டா போடுவதற்கு பயிற்சி வழங்குவதற்காக ஒரு தனி கோச்சிங் செண்டரே இயங்கி வருகிறது.

நீட் பயிற்சி மையம், குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம், என எத்தனையோ பயிற்சி மையங்களை நாம் அறிந்திருப்போம்.
ஆனால் பரோட்டா போடுவது எப்படி என்பதை சொல்லிக்கொடுக்க தனி பயிற்சி மையமே மதுரையில் இயங்கி வருவதை இப்போது தான் அறிகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையை பொறுத்தவரை ஒரு வித்தியாசமான மாநகரம் என்பதை அங்கு நடக்கும் நிகழ்வுகள் அடிக்கடி உணர்த்தி வருகின்றன. ரசிகர்களோ, அரசியல் கட்சியினரோ, ஒரு போஸ்டர் அடித்தால் கூட அந்த போஸ்டர் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தான் இருக்கும். அந்தளவு புதுமையான வித்தியாசமான வாசகங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் மதுரையிலிருந்து நமக்கு கிடைத்த புது தகவல் அங்கு பரோட்டா போடுவதற்கென தனி கோச்சிங் செண்டர் இயங்கி வருவது என்பது தான்.
பரோட்டா போட பயிற்சி
இதை படிக்கும் பலருக்கும் என்னாது பரோட்டா போட ஒரு பயிற்சி மையமா என்ற கேள்வி எழுவதுடன், சிரிப்பும் வரும். ஆனால் தனது தொழிலில் மாற்றியோசித்து அதற்கு செயல்வடிவமும் கொடுத்திருக்கிறார் மதுரையை சேர்ந்த முகமது காசிம். இவரிடம் நாம் பேசிய போது, கடந்த 4 ஆண்டுகளாக பரோட்டா போட பயிற்சி வழங்கி வருவதாகவும், பேட்ஜ் வாரியாக கிளாஸ் நடத்தப்படுவதாகவும் கூறினார். தினமும் 2 மணி நேரம் என்ற அடிப்படையில் 10 நாள் பயிற்சி தரப்படும் எனக் கூறினார்.
ரூ.4,000 கட்டணம்

இதற்கான கட்டணமாக ரூ.4,000 பெறுவதாக அவர் தெரிவித்தார். கொத்து பரோட்டா, பன் பரோட்டா, வீச்சு பரோட்டா, சாதாரண பரோட்டா, காயின் பரோட்டா, என பரோட்டாவில் என்னென்ன வகைகள் உள்ளதோ அனைத்து வகைகளையும் சொல்லிக் கொடுப்பதாக கூறும் காசிம், தனது பயிற்சி மையத்தில் பரோட்டா போட கற்றுக்கொண்ட பலரும் வளைகுடா நாடுகளில் நல்ல சம்பளத்தில் பரோட்டா மாஸ்டர்களாக பணியாற்றி வருவதாக பெருமிதம் தெரிவிக்கிறார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments