Thursday, May 16, 2024
Homeஇந்திய செய்திகள்பிஎப்7 உருமாறிய வைரசால் சீனாவில் திடீரென அதிகரித்த கொரோனா பதிப்பு…குஜராத்தில் கண்தரிப்பட்ட பிஎப்7.

பிஎப்7 உருமாறிய வைரசால் சீனாவில் திடீரென அதிகரித்த கொரோனா பதிப்பு…குஜராத்தில் கண்தரிப்பட்ட பிஎப்7.

காந்திநகர்: சீனாவில் கொரோனா பரவல் திடீரென அதிகரிக்க காரணமான பிஎப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவின் வூஹான் மாகாணம்தான் கொரோனா வைரஸின் பிறப்பிடமாக குற்றம்சாட்டப்படுகிறது. 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ்.கடந்த 3 ஆண்டுகளாக ஒட்டுமொத்தமாக மனித குலத்தை பெரும் பேரழிவுக்கு தள்ளிவிட்டிருக்கிறது கொரோனா வைரஸ். கொரோனா பரவல் காரணமாக பல நாடுகளில் லாக்டவுன் எனும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உலகின் பொருளாதாரம் நிர்மூலமாகிப் போனது. இதில் நமது இந்தியாவும் விதிவிலக்கு அல்ல.

கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கொரோனா தடுப்பூசிகள் பல நடைமுறையில் உள்ளன. இந்தியாவில் 200 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. ஆனால் ஒட்டுமொத்த இந்திய அளவில் 28% பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். கடந்த பல மாதங்களாக கொரோனா குறித்த அச்சம் விலகி இருந்தது.

இப்போது மீண்டும் சீனாவில் இருந்து கொரோனா குறித்த பேரச்சம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா கோரத்தாண்டவம் உக்கிரமாக இருக்கிறதாம். சீனாவின் மயானங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் உடல்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனவாம். தகன மேடைகள் சடலங்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன என்கின்றன சர்வதேச ஊடகங்கள். சீனாவில் அடுத்த 3 மாதங்களில் சுமார் 60% பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர்; பல லட்சம் பேர் செத்து மடிவார்கள் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சீனாவில் பெரும் பதற்றமும் அச்சமும் நிலவி வருகிறது.

சீனாவை மரண தேசமாக்கிக் கொண்டிருக்கும் தற்போதைய கொரோனா வைரஸ் பிஎப் 7 என்ற உருமாறிய அல்லது திரிபு வைரஸ்தான். இதுதான் ஒரே நேரத்தில் பல நேருக்கு சட்டென பரவும் தன்மை அல்லது வீரியம் கொண்டதாக இருக்கிறதாம். இதனால் கொத்து கொத்தாக மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன என எச்சரிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து இந்தியாவிலும் கொரோனா பரிசோதனைகளில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் கொவிட் 19 பாதிப்புகள் அதிகரித்து வருவதையடுத்து பொது சுகாதார அமைப்பின் கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மை தயார் நிலைக் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவாருடன் இணைந்து ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் நித்திஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே பால் சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உலக அளவில் நிலவி வரும் கொவிட் 19 சூழ்நிலை மற்றும் உள்நாட்டு நிலைமைக் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் இக்கூட்டத்தில் விரிவாக எடுத்துரைத்தார். சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டிய மத்திய சுகாதார அமைச்சர்,கொவிட் 19-ன் புதிய உருமாற்றத்தால் எதிர்வரும் பண்டிகையையும் கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். கொவிட் 19 பரவல் இன்னும் முழுமையாகக் குறையவில்லை என்றும் எனவே கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார். கொவிட் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், கொவிட் 19 தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களை டாக்டர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டுள்ளார்

இச்சூழ்நிலையில் குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதித்த ஒருவருக்கு பிஎப் 7 எனும் கொடிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அமெரிக்காவில் இருந்து குஜராத்துக்கு திரும்பிய 61 வயது மூதாட்டியிடம் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் சீன விமானங்கள், சீன சுற்றுலா பயணிகளுக்கு உடனே தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments