Thursday, May 16, 2024
Homeஉலக செய்திகள்பெண்கள் பல்கலைக்கழகங்களில் படிக்க தடை… ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அதிரடி.

பெண்கள் பல்கலைக்கழகங்களில் படிக்க தடை… ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அதிரடி.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் படிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தாலிபான் ஆட்சி வந்து ஒரு வருடம் முடிந்த நிலையில் அங்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மொத்த உலகமும் முன்னேறிக்கொண்டு இருக்க தாலிபான்கள்.. 20 வருட போருக்கு பின் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடித்தும் கூட இன்னும் மாறவே இல்லை. 20 வருடங்களுக்கு முன் பெண்களை எப்படி நடத்தினார்களோ அப்படித்தான் இப்போதும் நடத்தி வருகின்றனர். சவுக்கடி தண்டனை, பெண்களுக்கு எதிரான பர்தா கட்டுப்பாடுகள், கடுமையான தண்டனைகள், பெண் சுதந்திரத்திற்கு எதிரான விதிகள் என்று ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கடுமையான ஆட்சி புரிந்து வருகின்றனர்.

தாலிபான்கள்
தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த போது, விதிகளை தளர்த்துவோம். முன்பு மாதிரி இருக்க மாட்டோம் என்றுதான் உறுதி அளித்தனர். சரி நாதஸ் திருந்திட்டான் போல என்றுதான் பல்வேறு உலக நாடுகள் எதிர்பார்த்தன. ஆனால் ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் தாலிபான்கள் மீண்டும் தங்கள் வேலையை காட்ட தொடங்கினார்கள். சர்வதேச அழுத்தத்தை மீறி பெண்களுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகளை தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் விதித்து வருகிறார்கள். முக்கியமாக வந்த சில வாரங்களிலேயே பெண் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.பெண்கள்
பணியிடங்களில் பெண்கள் வேலை பார்க்க கூடாது என்று உத்தரவிடப்பட்டது. முன்பு இருந்தது போல மிக கடுமையான கட்டுப்பாடுகள் இல்லை. இருப்பினும் பெண்களுக்கும், பல்வேறு விதமான கொண்டாட்டங்களுக்கும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இஸ்லாமில் ஹராமாக கருதப்படும் விஷயங்களுக்கு தாலிபான்கள் மூலம் ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. அந்த வகையில்தான் சமீபத்தில் ஆப்பாகனிஸ்தானில் தாலிபான்கள் அங்கு மதுப்பானை குடோன் ஒன்றில் இருந்து 3000 லிட்டர் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தாலிபான் அரசின் கீழ் செயல்படும் உளவுத்துறை காபூலில் திடீரென சோதனை மேற்கொண்டது. பல்வேறு இடங்களில் மதுபானம் பதுக்கி இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தடை
இந்த நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் படிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தாலிபான் ஆட்சி வந்து ஒரு வருடம் முடிந்த நிலையில் அங்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் இதற்காக சுற்றறிக்கை சென்றுள்ளது. பெண்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்ளே அனுமதிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்புதான் அங்கு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை எழுதினார்கள். பலர் ஆசிரியர் மற்றும் மருத்துவ நுழைவு தேர்வுகளை எழுதிய நிலையில்.. பெண்கள் எப்படி படிக்கலாம் என்று தாலிபான்கள் தடை விதித்து உள்ளனர். பெண்கள் பலர் இதனால் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான்
அங்கே தாலிபான் ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு சமூக பிரச்சனைகள் நிலவி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் நிலவும் உணவு தட்டுப்பாடு காரணமாக அங்கு 10 லட்சம் குழந்தைகள் இந்த குளிர்காலம் முடியும் முன் பலியாகும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக மக்களின் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது. அதேபோல் மேற்கு உலக நாடுகளின் இறக்குமதி குறைந்த காரணத்தால் கொஞ்சம் கொஞ்சமாக கிடங்குகளில் இருந்த உணவுகள் காலியாக தொடங்கின. இப்போது ஆப்கானிஸ்தானில் உணவு தானியங்கள் இல்லாமல், அரசு மக்களுக்கு உணவு வழங்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறது. தாலிபான்களும் பெரிய அளவில் சர்வதேச உறவுகளை கொண்டு இருக்கவில்லை என்பதால் அவர்களால் சர்வதேச உதவிகளை அவ்வளவு எளிதாக பெற முடியவில்லை. இதன் காரணமாக தாலிபான்களின் ஆட்சிக்கு கீழ் கொஞ்சம் கொஞ்சமாக உணவுப்பஞ்சம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments