Sunday, April 28, 2024
Homeசினிமாபிக் பாஸ் தமிழ் 6 டைட்டிலை வெல்லப்போவது விக்ரமனா அசீமா? அனல் பறக்கும் இணைய விவாதம்!

பிக் பாஸ் தமிழ் 6 டைட்டிலை வெல்லப்போவது விக்ரமனா அசீமா? அனல் பறக்கும் இணைய விவாதம்!

பிக் பாஸ் தமிழ் 6-ன் வெற்றியாளர் யார் என்பது தான் தற்போது இணையத்தில் ஹாட் டாபிக்.

இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தமிழுக்கும் அறிமுகமானது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் இதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

100 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் அனைத்து கடினமான தருணங்களையும் கடந்து இறுதிவரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவரே டைட்டில் வின்னராவார்.

தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் பிக் பாஸ் தமிழ் 6-வது சீசன், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. 21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியில் தற்போது விக்ரமன், அசீம், ஷிவின், மைனா, அமுதவாணன் ஆகிய 5 பேர் மட்டுமே உள்ளனர்.

இதில் வெற்றி பெறப்போவது விக்ரமனா அல்லது அசீமா என்பது தான் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு.

பத்திரிக்கையாளராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விக்ரமன், தனது கருத்துகளை யார் மனதையும் புண்படுத்தாமல் எடுத்து வைப்பதோடு, கிடைக்கும் கேப்பில் எல்லாம் சமூக நீதி, பெண்ணுரிமை, பகுத்தறிவு சிந்தனைகளை பேசி பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார்.

சீரியல் நடிகர் அசீம், தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்துவது, மற்றவர்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது, எந்த ஒரு சாதாரண உரையாடலையும் சண்டையாக மாற்றுவது என நிகழ்ச்சியின் டி.ஆர்.பி-க்கு உதவி வருகிறார்.

பிக் பாஸ் தமிழ் 6 இறுதி கட்டத்தை நெருங்கியதையடுத்து விக்ரமன் – அசீம் இருவரில் யார் டைட்டிலை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விக்ரமனின் அரசியல் நிலைபாடுகளில் எதிர் கருத்து கொண்டவர்கள், அசீமுக்கு ஆதரவாக இணையத்தில் களமாடுகின்றனர்.

இந்நிலையில் விக்ரமன் சார்ந்திருக்கும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவருக்கு ஆதரவாக வெளியிட்ட ட்விட்டர் பதிவு, ஒருபக்கம் ஆதரவையும், மறுபக்கம் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments