Tuesday, May 7, 2024
Homeசினிமாபிரபல ஓடிடி தளத்தில் வெளியாகும் ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம்!

பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகும் ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம்!

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை அரண்மனையில் தனது நண்பர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துக் கொண்டார்.

இதையடுத்து ஹன்சிகா மற்றும் சோஹேல் கதுரியாவின் திருமணம் தலைப்பு செய்தியாக மாறியது.

இப்போது, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில், ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக ‘ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா’ ஒளிபரப்பாகவிருக்கிறது. இதில் ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டங்கள் மற்றும் உற்சாகத்தை ரசிகர்கள் பார்த்து மகிழலாம்.

அதோடு சோஹேலை திருமணம் செய்துக் கொள்ள ஹன்சிகா எடுத்த முடிவு, ஃபேரிடேல் திருமணம் என 6 வாரங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகளை ஹன்சிகா பகிர்ந்துக் கொள்ளவுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments