Sunday, May 5, 2024
Homeஇந்திய செய்திகள்புகைபிடிப்பவர்களுக்கு ஐபோனுக்கு வாரண்ட்டி கிடையாது..?

புகைபிடிப்பவர்களுக்கு ஐபோனுக்கு வாரண்ட்டி கிடையாது..?

ஆப்பிள் ஐபோன் உள்ளிட்டவை வாங்கும்போதுசிறுக சிறுக சேர்த்து ஒரு பெரிய ஆடம்பரப் பொருள் வாங்குகிறோம் என்ற எண்ணம் தான் இருக்கும். பொத்தி பொத்தி அதை பாதுகாத்திருப்போம். டி.பி வைக்க போட்டோ எடுக்க ஐபோன் வாடிக்கையாளரை தேடுவோம். இப்படி பல நினைவுகளைத் தாங்கி நிற்கும் ஆப்பிள் கேட்ஜெட்டுகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் ஒரு வாரண்ட்டி நிபந்தனையை பற்றி நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.

ஆப்பிள் நிறுவனம் தங்களது பொருட்கள் மீதான வாரண்ட்டி பெற சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில் ஒரு முக்கிய விதி என்னவென்றால் நீங்கள் புகை பிடிப்பவராக இருந்து உங்கள் ஐபோன் பழுதானால் அதற்கு உங்களால் வாரண்ட்டி பெறமுடியாது. என்ன நம்பிக்கை இல்லையா? நம்பிக்கை இல்லை என்றால் உங்கள் ஆப்பிள் சாதனங்களின் வாரண்ட்டி அட்டையை எடுத்து பாருங்கள்.

2007 ஆம் ஆண்டு ஆப்பிளின் மேக்புக்கை பயன்படுத்திய ஒருவர் தனது சாதனம் அதிகமாக சூடாகிறது என்று அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் கொடுத்துள்ளார். ஆனால் அந்த மேக்புக்கை பிரித்து பார்க்கும் போது அதில் புகை படிந்திருப்பதை பார்த்துவிட்டு வாரண்டி பெற முடியாது என்று ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது. இதேபோல, வேறொரு இடத்தில் ஐமேக்கில் இருந்த புகை படிமத்தால் வாரண்டி மறுக்கப்பட்டது.

இவர்கள் எல்லாம் ஆப்பிளை நிறுவனத்திடம் காரணம் கேட்டு வழக்கு போட்ட போதுதான் வாரண்டி விதிகளில் உள்ள ஒரு நிபந்தனை தெரியவந்துள்ளது. ஓஷோவில் நடந்த உலக மாநாட்டில் சில வேதியல் பொருட்களை அபாயகரமான பொருட்கள் என்ற பட்டியலில் வகைப்படுத்தினர். அதில் புகை பிடிக்கும்போது வரும் நிக்கோடினும் ஒன்று. அதன் படிமம் ஆப்பிள் சாதனங்களில் படிந்திருந்தால் அதை சரி செய்து தர முடியாது என்று ஆப்பிள்  நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த கேஜெட்டுகளை மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயகரமான பொருள் என்று வகைப்படுத்தி அதை ஒதுக்கிவிடுகின்றனர். அதனால் நீங்கள் ஒருவேளை ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்துபவராக இருந்தால் புகை பிடிக்கும் போது அதை தள்ளியே வையுங்கள். இல்லையென்றால் உங்கள் போனை குப்பையில் போட வேண்டியதாகிவிடும்.

இருக்கும் ஐபோனை புகையால் நிரப்பிவிட்டு அதை சரி செய்யமுடியாமல் மீண்டும் லட்சக்கணக்கில் செலவு செய்து புது போன் வாங்க வேண்டுமா என்று யோசித்துப்பாருங்கள். அதனால் புகை பழக்கத்தையும் முடிந்தவரை விடப்பாருங்கள். புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதோடு நாம் பொத்தி  பாதுகாத்த போனும் கேடாகிவிடும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments