Saturday, April 27, 2024
Homeவன்னி செய்திகள்மன்னார் செய்திகள்மட்டக்களப்பில் 33 வருடங்களின் பின் சிங்களப் பாடசாலையை திறக்கும் ஆளுனர்!

மட்டக்களப்பில் 33 வருடங்களின் பின் சிங்களப் பாடசாலையை திறக்கும் ஆளுனர்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 33 வருடங்களாக மூடப்பட்டிருந்த ஒரேயொரு சிங்களப் பாடசாலை இன்று (27) மாலை திறக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு நகரில் இந்த பாடசாலை திறக்கப்படுகிறது.

1990ஆம் ஆண்டு வரை இந்த பாடசாலை இயங்கியது. மட்டக்களப்புக்கு தொழில் நிமித்தம் வந்து தற்காலிகமாக தங்கியிருந்த சிங்களப் பெற்றோரின் பிள்ளைகளின் கல்விக்காக இந்த பாடசாலை இயங்கியது. அங்கு சிறிய எண்ணிக்கையான மாணவர்களே கல்வி கற்றனர்.

யுத்தம் தீவிரம் பெற்றதையடுத்து அந்த பாடசாலை மூடப்பட்டது.

தற்போதைய கிழக்கு ஆளுனர் பல சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஏறாவூரில் வீதிப்பெயரை சிங்களத்தில் மாற்ற முயன்று மூக்குடைபட்டார். ஆளுனரின் மற்றொரு நடவடிக்கையாக இந்த சிங்களப்பாடசாலை புனரமைக்கப்பட்டது.

ஆளுனரின் உத்தரவின் பெயரில், மாகாண நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை புனரமைக்கப்பட்டது. பாடசாலையை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் திறந்து வைக்கவுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments