Thursday, May 2, 2024
Homeஅரசியல்செய்திமத்திய அரசை சரமாரியாக விமர்சனம் செய்த மல்லிகார்ஜுன கார்கே..எதற்காக இவ்வளவு ஆவேசம்.

மத்திய அரசை சரமாரியாக விமர்சனம் செய்த மல்லிகார்ஜுன கார்கே..எதற்காக இவ்வளவு ஆவேசம்.

ஜெய்ப்பூர்: “மக்கள் முன்பு தன்னை சிங்கமாக காட்டிக் கொள்ளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு, சீனா விவகாரத்தில் எலியாக மாறி அஞ்சி ஓடுகிறது” என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமீபகாலமாகவே சீனா – இந்தியா மோதல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறது.

மேலும், நாடாளுமன்றத்திலும் சீனா விவகாரம் குறித்து பேச காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

புயலை ஏற்படுத்திய ராகுல் கருத்து
அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதிக்குள் கடந்த 9-ம் தேதி 200-க்கும் மேற்பட்ட சீனப் படையினர் அத்துமீறி நுழைந்ததும், பின்னர் அவர்கள் இந்திய ராணுவத்தினரால் விரட்டியடிக்கப்பட்டதும் வடகிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அண்மையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, ‘சீனா பெரிய போருக்கு தயாராகி வருகிறது. ஆனால், இந்திய அரசோ தூங்கிக் கொண்டிருக்கிறது’ எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஏன் பயப்படுகிறார் மோடி?
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடா நடைப்பயணத்தில் மல்லிகார்ஜுன கார்கே இன்று கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: சீனாவால் இந்தியாவுக்கு ஆபத்து நேரிடப் போவதை எச்சரிக்கும் விதமாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், ராகுல் காந்தி எழுப்பிய விஷயத்துக்கு பதிலளிக்காமல், ராகுல் காந்தி இந்திய ராணுவத்தை அவமதித்துவிட்டார், இந்தியாவை உடைக்க பார்க்கிறார் என பாஜக கூறி வருகிறது. இன்று வரையில், நாடாளுமன்றத்தில் சீனா விவகாரம் குறித்து பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. சீனா – இந்தியா எல்லை பிரச்சினையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மோடி ஏன் பயப்படுகிறார்?

வெளியே சிங்கம்.. உள்ளே எலி..
பாஜக அரசை உன்னிப்பாக கவனித்தால் மக்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக தெரியவரும். அதாவது, மக்கள் மத்தியில் பேசும் போது சிங்கம் போல தன்னை பாஜக அரசு காட்டிக்கொள்ளும். ஆனால், அதனை செயல்பாடுகளோ எலியை போல இருக்கும். இப்போது சீனா விவகாரத்திலும் மத்திய அரசின் நடவடிக்கை அப்படிதான் இருக்கிறது. சீனா குறித்து பேசினாலே மோடி தலைமையிலான பாஜக அரசு ஓடி ஒளிந்து கொள்கிறது.ஊஞ்சல் ஆடிய மோடி
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையினருடன் நடந்த மோதலில் நமது 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஆனால், அதற்கு பிறகும் 18 முறை சீன அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ஏன்.. அவருடன் சேர்ந்து ஊஞ்சல் கூட ஆடினார். இருந்தபோதிலும், எல்லைப்பகுதியில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இதுபற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க கூடாதா?

“உங்கள் நாய் கூட சாகவில்லை”
தியாகத்துக்கு பெயர்போன கட்சி காங்கிரஸ். சுதந்திரத்துக்காக எத்தனையோ காங்கிரஸார் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். ஆனால், பாஜகவினரின் நாய் கூட இந்த நாட்டுக்காக சாகவில்லை. ஆனால், அவர்கள் (பாஜக) தங்களை தாங்களே தேசபக்தர்கள் எனக் கூறிக் கொள்வார்கள். காங்கிரஸை பார்த்து தேசவிரோதிகள் எனக் கூறுவார்கள். பாஜக எவ்வளவு முயன்றாலும், அவர்கள் உண்மையான தேசபக்தர்களாக மாற முடியாது என்பது மக்களுக்கு தெரியும். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments