Thursday, May 2, 2024
Homeஅரசியல்செய்திவரப்போகும் தேர்தலில் தொகுதி மார விரும்பும் திருமா! மூத்த அமைச்சர்களுடன் கலந்தாய்வு.

வரப்போகும் தேர்தலில் தொகுதி மார விரும்பும் திருமா! மூத்த அமைச்சர்களுடன் கலந்தாய்வு.

சென்னை : விசிக தலைவரும், சிதம்பரம் எம்.பியுமான திருமாவளவன், 2024 தேர்தலில் தொகுதி மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். சமீபத்தில் திமுக அமைச்சர் கே.என்.நேருவும் இதுபற்றி திருமாவிடம் பேசியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த தேர்தலில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் எம்.பி தொகுதியில் பானை சின்னத்தில் நின்று போராடி வென்றார் திருமாவளவன். இந்நிலையில், இந்த முறை அங்கு பாமக தீவிரமாக தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது.இதனால், திருமாவளவனுக்கு சேஃபான தொகுதியாக சிதம்பரம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், திருமாவளவன் தொகுதி மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

தேர்தல் வேலைகள் தீவிரம்

தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகள் 2024 எம்.பி தேர்தலுக்கான பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. எந்தெந்தத் தொகுதிகள் தங்களுக்கு பலமாக இருக்கும் என கட்சிகள் கணக்குப் போட்டு, காய்நகர்த்தத் தொடங்கி விட்டன. திமுக தலைமை, தமிழ்நாடு முழுவதும் வெற்றி வாய்ப்புகள் பற்றிய சர்வேவை எடுத்து கையில் வைத்திருக்கிறதாம். முக்கிய கட்சிகளின் தலைவர்கள், தாங்கள் பலமாக இருக்கும் தொகுதிகளை முற்றுகையிட்டு வருகின்றனர். விசிகவும், வடக்கு மாவட்டங்களில் சில தொகுதிகளைக் குறிவைத்திருப்பதாகத் தெரிகிறது.

கூட்டணி
திமுக கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட்சிகள் கிட்டத்தட்ட அப்படியே தொடரும் என்கிறார்கள். விசிகவுக்கு அதிமுக வலைவீசி வந்தாலும், திமுகவே சேஃபான இடம் என திருமாவளவன் கருதுகிறார். கொள்கை ரீதியாக திமுகவுடன் பயணிப்பதே சரியாக வரும் என்ற கணக்கில் அவர் இருப்பதாகத் தெரிகிறது. அதிமுகவை பாஜக விழுங்கி வருகிறது என்றெல்லாம் திருமா பேசி வருவதே, அவர் அதிமுக கூட்டணிக்குச் செல்லப்போவதில்லை என்பதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

திருமாவளவன்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து விசிக போட்டியிட்ட நிலையில் சிதம்பரம் தொகுதியில் களம் கண்டார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். விசிகவின் ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்ற நிலையில், சிதம்பரம் தொகுதியில் ‘பானை’ சின்னத்தில் போட்யிட்டார் திருமாவளவன். புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தி வெற்றி பெறுவது கடினம் என்பதால் அவரையும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வலியுறுத்தியும் மறுத்துவிட்டார் திருமா

சொற்ப வாக்குகளில் கரையேறிய பானை
இதனால் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் தான் மட்டும் தனி சின்னத்தில் நின்றார் திருமாவளவன். திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் அவருக்கும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரனுக்கும் இடையே கடும் போட்டி நிகழ்ந்த நிலையில், கடைசியாக இரவில் தான் தேர்தல் முடிவு வெளியிடப்பட்டது. திருமாவளவன் வெறும் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பெரிய சவால்
இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர், சிதம்பரம் தொகுதிகளில் பாமக தனிக் கவனம் செலுத்தி வருகிறது. பாமக தலைவர் அன்புமணி, கடலூர் மாவட்டத்தை மாடலாக தேர்வு செய்தது தொகுதி வாரியாக நிர்வாகிகளை நியமித்து பூத் கமிட்டி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். தலித் வாக்குகளையும் குறிவைத்து இறங்கியுள்ளார். இதனால், வரும் தேர்தலில் விசிகவுக்கு பெரிய சவால் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.திமுக அமைச்சர்
இந்நிலையில் தான், திமுக அமைச்சர் கே.என்.நேரு, திருமாவளவனிடம், தொகுதி பற்றிப் பேசியதாகக் கூறப்படுகிறது. திமுகவில் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள், தங்கள் மாவட்டத்தில் வெற்றியை ஈட்டி தலைவர் ஸ்டாலினின் கையில் சமர்ப்பிக்கத் தயாராகி வருகிறார்கள். அந்தவகையில், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு, சேலத்தில் முகாமிட்டு, கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். தேர்தல் தொடர்பான வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments