Thursday, May 2, 2024
Homeசினிமாமாரடைப்பால் காலமான வாரிசு திரைப்பட பிரபலம்…படக்குழுவினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பால் காலமான வாரிசு திரைப்பட பிரபலம்…படக்குழுவினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கலை இயக்குநர் சாபு சிரிலின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கிய சுனில் பாபு, ‘கஜினி’, ‘துப்பாக்கி’, ‘பெங்களூர் டேஸ்’, ‘பிரேமம்’, ‘எம்.எஸ் தோனி’, ‘சீதா ராமம்’, போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு செட் அமைத்திருக்கிறார். ஜனவரி 11ம் தேதியன்று பொங்கலையொட்டி வரவிருக்கும் விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கும் இவர்தான் கலை இயக்குநர்.

சுனில் பாபு
திடீரென மாரடைப்பு ஏற்பட்டு எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்திருக்கிறார். இவரின் மறைவிற்கு அனைத்து மொழி திரைதுறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே சுனில் பாபு பணியாற்றிய கடைசி படமான ‘வாரிசு’ படத்தின் இயக்குநர் வம்சி, சுனில் பாபு மறைவு தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “எங்களுக்கு வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளீர்கள். ஒரு நல்ல சகோதரராகவும், தோழனாகவும் இருந்தீர்கள். இன்று சத்தமில்லாமல் மறைந்துவிட்டீர்கள். நீங்கள் பணியாற்றிய ஒவ்வொரு படத்திலும் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் வாரிசு தயாரிப்பு நிறுவனமும் வாரிசு படக்குழு சார்பில் சுனில் பாபு மரணத்திற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments