Friday, May 17, 2024
Homeஇலங்கை செய்திகள்மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட நிபந்தணை !

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட நிபந்தணை !

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக கடன் மறுசீரமைப்புக்கு இடமளிக்கப்படாது எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

நிவாரணம் இல்லாமல் சேவைகளை வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்க ஐஎம்எஃப் நிபந்தனைகளை விதித்துள்ளது, எனவே இதற்குப் பிறகு எந்த நிவாரணமும் வழங்கப்படாது என்றார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வர்த்தக நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பு எளிதானது அல்ல. அவர்களின் நிபந்தனைகளுக்கு நாம் அடிபணிய வேண்டும். இல்லையெனில், கடன் வழங்கப்படாது. சர்வதேச ஆதரவு இல்லை. சேவை வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்கிறார்கள்.

இனி நிவாரணங்கள் இல்லை. மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும். கடனை மிகைப்படுத்தும் வரை மறுசீரமைப்பு செய்யப்படுவதில்லை. மேலும் புதிய கடன் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments