Saturday, May 18, 2024
Homeசினிமாமிரட்டலான புரமோவுடன் வெளியானது 'தளபதி 67' படத் தலைப்பு - ஷாக் கொடுத்த லோகேஷ்

மிரட்டலான புரமோவுடன் வெளியானது ‘தளபதி 67’ படத் தலைப்பு – ஷாக் கொடுத்த லோகேஷ்

கடந்த 2 நாட்களாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி 67 பட அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகிவருகின்றன. அந்த வகையில் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான தளபதி 67 பட பூஜை வீடியோவில் நடிகர் மரியம் ஜார்ஜ் இடம்பெற்றிருந்தார். இவர் கைதி படத்தில் நெப்போலியன் என்ற போலீஸ் கான்ஸ்டபிளாக கலக்கியிருப்பார்.

அதே போல விக்ரம் படத்தல் ஏஜென்ட் டீனாவாக கலக்கிய வசந்தி சமீபத்தில் காஷ்மீர் சென்றுள்ள படக்குழுவில் இடம்பிடித்திருந்தார். தளபதி 67ல் நெப்போலியனும் ஏஜென்ட் டீனாவும் இடம்பிடித்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வரத்துவங்கின. இந்தப் படத்தின் தலைப்பு கே என்ற ஆங்கில எழுத்தில் துவங்குவதாக கூறப்பட்டது.

மற்றொரு பக்கம் படத்தின் லீக்கானதாக கருடன் என்ற போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவியது.  முன்னதாக மாஸ்டர் படத்தின் தலைப்பையும் பலரும்  வாத்தி என்று கணித்தனர். ஆனால் அவர்களின் கணிப்பை லோகேஷ் பொய்யாக்கினார்.

இந்த நிலையில் தற்போது படத்தின் மிரட்டலான புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவில் படத்துக்கு லியோ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. வழக்கம்போல இந்த முறையும் அனைவரது கணிப்பையும் இயக்குநர் லோகேஷ் பொய்யாக்கியிருக்கிறார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments