Wednesday, May 15, 2024
Homeஇந்திய செய்திகள்மீண்டும் உயர்ந்த தங்கம் விலை …!!தற்போதைய விலை என்ன தெரியுமா..?

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை …!!தற்போதைய விலை என்ன தெரியுமா..?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது. இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிகமாகியுள்ளது.

நேற்று தங்கம் ஒரு கிராமிற்கு ரூ. 55 குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் அதன் விலை அதிகமாகியுள்ளது.

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 20 உயர்ந்து இன்று 5,702 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 160 ரூபாய் வரை உயர்ந்து 45,616 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.20 உயர்ந்து 5,340 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 160 ரூபாய் வரை உயர்ந்து 42,720 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா உயர்ந்து 72.70 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 72,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments