Tuesday, April 30, 2024
Homeவன்னி செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்முல்லைத்தீவை சேர்ந்த 10 பேர் தமிழகத்தில் தஞ்சம்..!

முல்லைத்தீவை சேர்ந்த 10 பேர் தமிழகத்தில் தஞ்சம்..!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான படகின் மூலம் தனுஷ்கோடி பகுதிக்கு வந்த தமிழர்கள் 10 பேரை மண்டபம் மெரைன் பொலிஸார் மீட்டுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரத்தைச்சேர்ந்த சாருஜன் (23) அவரது மனைவி அம்பிகா (23) ஒரு வயது மகன் மற்றும் சசிகுமார் (43) அவரது மனைவி கலைசெல்வி (38) மகன்கள் ரஜிதன் (17), அபிசாக் எஸ்ரேன் (05) மற்றும் அக்கினேஷ்வரி (75) மகள் யானுஜா (32) பேத்தி ஸ்லியா (09) ஆகிய 3 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆண்கள், 4 பெண்கள், 3 ஆண் குழந்தைகள், 1 பெண் குழந்தை உட்பட 10 பேர் அகதிகளாக இந்தியா சென்றுள்ளனர்.

இவர்களை மண்டபம் மெரைன் காவல் நிலையத்துக்கு பொலிஸார் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அதில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து இந்தியா வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் இலங்கை முல்லைத்தீவிலிருந்து மே 5ம் திகதி சட்டவிரோதமான படகில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2 மணிக்கு அரிச்சல்முனை மணல் தீடையில் இறக்கிவிடப்பட்டதாகவும் இதற்காக ரூ.1 இலட்சத்துக்கு 50 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.

அவர்களிடம் மத்திய மாநில உளவுப்பிரிவு பொலிஸாரும் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments