Monday, May 6, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் தனக்குத்தானே தீ மூட்டி இளம் குடும்பப் பெண் மரணம்; வெளியான அதிர்ச்சி தகவல்.!

யாழில் தனக்குத்தானே தீ மூட்டி இளம் குடும்பப் பெண் மரணம்; வெளியான அதிர்ச்சி தகவல்.!

யாழில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவரின் வீட்டில் தீமூட்டி தற்கொலைக்கு முயன்ற இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ் குப்பிளான் பகுதியை சேர்ந்த 36 வயதான பாலகிருஷ்ணர் விஜிதா என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் யாழ் வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மல்லாகம் உப அலுவலகத்தில் கடமையாற்றி வந்தவர் என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன

குறித்த பெண்ணுக்கு 10 வயதான பிள்ளை ஒன்றும் உள்ளது.

குறித்த ஆண் இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவரும் நீண்டகாலத்தின் முன்னரே திருமணமாகியவர் எனவும் அவரது மகன் ஒருவர் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றி வருகிறார் .

பல வருடங்களின் முன்னரே குறித்த ஆணின் மனைவி வெளிநாடு சென்று தனித்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணும் குறித்த தவிசாளரும் நெருக்கமாக பழகி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த பெண்ணின் வீட்டிலேயே தவிசாளர் உணவருந்துவதாகவும் அந்த பெண்ணின் பிள்ளையை வெளியிடங்களிற்கும் கல்வி நடவடிக்கைக்கும் அழைத்து செல்வதாகவும் பிரதேச மக்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டிலிருந்து குறித்த பெண் பெற்றோலுடன் அவர் புறப்பட்டுள்ளார்.

வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் நகை, பணம் இருக்குமிடங்களை பிள்ளையிடம் காண்பித்து விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தவிசாளரின் வீட்டிற்கு சென்று வாக்குவாதப்பட்ட பின்னர் தனது உடலில் பெற்றோல் ஊற்றி எரித்ததுடன் கிண்றுக்குள் குதித்ததாகவும் கூறப்படுகிறது.

உடல் முழுவதும் தீக்காயமடைந்த நிலையில் அவர் யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவர் தற்கொலை செய்தாரா அல்லது குற்றச்செயல்கள் நடந்ததா என்பது உறுதியாகாத நிலையில் தவிசாளர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதற்கான சாட்சியங்கள் தென்பட்டதையடுத்து தவிசாளர் விடுவிக்கப்பட்டார்.

இலங்கை சட்டங்களின்படி தற்கொலை ஒரு குற்றச்செயல், தற்கொலை செய்தது உறுதியானால் அதன் பின்னணி காரணங்களை தேடி ஆராய்வதில்லை அதனால் இந்த வழக்கு இத்துடன் நிறைவடைந்து விடும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments