Friday, May 10, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் வர்த்தகரின் பணத்தை திருடி அயல்வீட்டு குடும்பப் பெண்ணுக்கு நகை வாங்கிய 18 வயது மகன்!!...

யாழில் வர்த்தகரின் பணத்தை திருடி அயல்வீட்டு குடும்பப் பெண்ணுக்கு நகை வாங்கிய 18 வயது மகன்!! கைது !

யாழ் நகரப்பகுதி பிரபல வர்த்தகர் ஒருவரின் மகனின் திருவிளையாடல் பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது. வர்த்தகரின் 3 லட்சம் ரூபா பணத்தை அவரது டெபிட் காட் மூலம் ஏரிஎம் இயந்திரம் மூலம் எடுத்து, யாழில் உள்ள நகைக் கடை ஒன்றில் சங்கிலி வாங்கி, அயல் வீட்டில் வசித்து வந்த இளம் குடும்பப் பெண்ணிற்கு பரிசளித்துள்ளான் அவரது மகன். தனது வங்கி அட்டையிலிருந்து தனக்கு தெரியாது 3 லட்சம் ரூபா பணம் எடுக்கப்பட்டுள்ளதை அவரது போனில் வந்த குறுந்தகவல்களை பரிசோதித்த போதே வர்த்தகர் அறிந்துள்ளார். குறித்த வங்கி அட்டை மனைவியிடமே வர்த்தகர் கொடுத்து வைத்திருந்தார். அவசர தேவைகளுக்கு குறித்த அட்டை மூலம் மனைவி பொருட்கள் வாங்குவதற்காக அந்த அட்டை கொடுக்கப்பட்டிருந்தது. மனைவியிடம் கொடுக்கப்பட்ட அட்டையை மகன் எடுத்தே இந்த திருவிளையாடலை புரிந்துள்ளான்.

இதனையடுத்து வர்த்தகர் வீட்டில் விசாரணைகள் மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். வீட்டில் தங்கியிருந்து வர்த்தரின் கடையில் வேலை புரிந்த இரு மலையக இளைஞர்களை பொலிசார் கைது செய்து விசாரணை நடாத்தினர். அவர்கள் பணத்தை எடுக்கவில்லை என அறிந்து வங்கி சிசிரிவி கமராவைப் பரிசோதனை செய்த போது மகனே குறித்த பணத்தை எடுத்துள்ளதை பொலிசார் அறிந்துள்ளனர். மகன் பணம் எடுத்ததை பொலிசார் மூலம் அறிந்த வர்த்தகர் உடனடியாக தனது முறைப்பாட்டை ரத்து செய்ய முயன்றார். ஆனாலும் பொலிசார் சம்மதிக்காது குறித்த பணத்தை மகன் எடுத்து போதைப் பொருள் போன்ற நடவடிக்கைக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்தனர். இதன் பின்னர் மகனிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த பணத்தை அட்சயதிருதியை அன்று எடுத்து யாழில் நகைக் கடை ஒன்றில் தங்கச் சங்கிலி வாங்கியதாக கூறியுள்ளார். சங்கிலி எங்கே? என பொலிசார் விசாரணை செய்த போது அந்தச் சங்கிலியை அயல் வீட்டுப் பெண்ணிடம் இரவலாக கொடுத்ததாக கூறியுள்ளார். பெண்ணும் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது தனது வீட்டுக்கு பொழுது போக்குக்காக வரும் குறித்த மாணவன் கழுத்தில் ஏன் ஒரு நகைகளும் அணிவதில்லை என கேட் பின் தனக்கு நகை வாங்கி தருவதாக கூறி சங்கிலியை தந்ததாக கூறியுள்ளார். அந்துடன் அந்த சங்கிலியை வங்கி ஒன்றில் அடைவு வைத்து தனிநபர் ஒருவரின் கடனை கொடுத்தாக பெண் கூறினார். பெண்ணை கைது செய்யுமாறு வர்த்தகர் அழுத்தம் கொடுத்த போதும் குறித்த பெண்ணை கைது செய்யாது பொலிசார் விடுவித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

27 வயதான இரு குழந்தைகளின் தாயாரான குறித்த குடும்பப் பெண்ணின் கணவர் மதுவுக்கு அடிமையான சாரதி எனவும் இரவு வேளைகளில் மட்டும் வீட்டுக்கு வருவதாகவும் தெரியவருகின்றது. வர்த்தகரின் மகனுக்கும் குறித்த குடும்பப் பெண்ணுக்கும் இடையில் என்ன மாதிரியான நட்பு இருந்தது என்பது தொடர்பாக வர்த்தகரே விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்..

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments