Saturday, May 18, 2024
Homeயாழ்ப்பாணம்யாழ்.மாவட்டத்தில் தவறான முடிவுகளால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக அறியமுடிகிறது.

யாழ்.மாவட்டத்தில் தவறான முடிவுகளால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக அறியமுடிகிறது.

இம்மாதம் ஆரம்பம் வரை இவ்வாறு 54 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஏ.ஜகத் விசாந்த மற்றும் காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் எம்.டபிள்யூ.சந்தனகமகே ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, கடந்த ஆண்டு 175 பேர் தவறான முடிவினால் இறந்தனர், அவர்களில் 9 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். 166 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 116 பேரும், யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த 59 பேரும் உயிரிழந்தவர்களில் அடங்குகின்றனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள், 42 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

இதன் போது காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் 39 பேரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, தவறான முடிவினால் உயிரிழக்கவிருந்த போது காப்பாற்றப்பட்ட சுமார் 50 பேர் இந்த வருடம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தவறான தீர்மானத்தை எடுத்து மரணத்தை ஏற்படுத்த முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments