Wednesday, May 8, 2024
Homeஇந்திய செய்திகள்ரயில் நிலையத்திற்கு பச்சை நிறம் அடித்ததால் கிளம்பிய சர்ச்சை... மசூதி போல உள்ளதாக குற்றச்சாட்டு !

ரயில் நிலையத்திற்கு பச்சை நிறம் அடித்ததால் கிளம்பிய சர்ச்சை… மசூதி போல உள்ளதாக குற்றச்சாட்டு !

பெங்களூர்:

கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள ரயில் நிலையத்தின் கட்டிடம் பச்சை கலராக மசூதி போல இருப்பதாக எழுந்த புகாரையடுத்து ரயில் நிலையத்திற்கு வெள்ளை நிறம் அடிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் கல்புர்கி ரயில் நிலையத்தின் கட்டிடத்தின் ஒரு பகுதி பார்ப்பதற்கு மசூதி போலவே இருப்பதாக தொடர் புகார்களை இந்து அமைப்பினர் கூறிவந்தனர்.

மட்டுமல்லாது இந்த கட்டிடத்திற்கு பச்சை நிறம் அடிக்கப்பட்டுள்ளதால் இது இந்து மக்களின் மனங்களை புண்படுத்துவதை போல இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மசூதி போல தொடக்கத்தில் இந்த குற்றச்சாட்டை ரயில்வே நிர்வாகம் காதில் போட்டுக்கொள்ளவில்லை. ஆனால் மைசூர் பேருந்து நிலைய சர்ச்சைக்கு பிறகு இந்த பிரச்னையின் வீரியம் அவர்களுக்கு புரிந்திருக்கிறது. அதாவது சில நாட்களுக்கு முன்னர் ‘பாஜக’ எம்பி ‘பிரதாப் சிம்ஹா’ மைசூர் பேருந்து நிலையம் குறித்த சர்ச்சையை எழுப்பி இருந்தார். இந்த பேருந்து நிலையம் பார்ப்பதற்கு இஸ்லாமிய சமூகத்தின் கட்டிடக்கலையை ஒத்து இருப்பதாகவும், இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்தியாவில் இதுபோன்ற கட்டிடங்கள் இந்துக்களின் மனங்களை புண்படுத்துவதாகவும் கூறியிருந்தார். எனவே இந்த பேருந்து நிலைய கட்டிடத்தை மாநகராட்சி இடிக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் நானே அதனை இடிப்பேன் என்று கூறினார். இதனையடுத்து அக்கட்டிடம் இடிக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது.

புகார் இதன் தொடர்ச்சியாக தற்போது கல்புர்கி ரயில் நிலைய பிரச்னை மேலெழுந்திருக்கிறது. இப்பிரச்னையை முதலில் எழுப்பியது ‘இந்து ஜாக்ருதி சேனே’ எனும் இந்துத்துவ அமைப்புதான். ரயில்வே அதிகாரிகளிடம் இது தொடர்பான புகாரை அவர்கள் கொடுத்தபோது ரயில்வே நிர்வாகம் இதனை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இந்த அமைப்பினர் ரயில் நிலையத்தையொட்டியுள்ள குடியிருப்புகளில் மக்களிடம் கையெழுத்து பெற்று மீண்டும் மனு கொடுத்துள்ளனர். அப்போதும் ரயில்வே நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை. இதன் பின்னர்தான் இப்பிரச்னை பெரியதாக வெடிக்கத் தொடங்கி இருக்கிறது

பச்சைக்கு பதில் வெள்ளை

ரயில்வே நிர்வாகம் தங்களது கோரிக்கைகளை பரிலீசிலிக்காமல் இந்துக்களை அவமானப்படுத்துவதாக இந்து ஜாக்ருதி சேனே அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். கல்புர்கி முழுவதும் பல இடங்களில் இந்த போராட்டங்களை அமைப்பினர் முன்னெடுத்தனர். விஷயம் கையை மீறி சென்றதை அறிந்த ரயில்வே அதிகாரிகள் சர்ச்சைக்குரிய கட்டிடத்திற்கு மீண்டும் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிக்க உத்தரவிட்டனர். இதனையடுத்து ரயில் நிலைய கட்டிடம் வெள்ளை நிறத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் இந்துத்துவ செயல்பாடுகளை தீவிரப்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன

குற்றச்சாட்டு குறிப்பாக, பாஜக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து சுதந்திரப் போராட்ட வீரர் திப்பு சுல்தானின் பிறந்த தினத்தை கொண்டாட மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் ஆதாரமற்றவையாக இருப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. அதாவது, திப்பு இந்துக்களை தீபாவளி நாளன்று தூக்கிலிட்டார் என்றும், அவர் சுதந்திர போராட்ட வீரராக இருக்க முடியாது என்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments