Thursday, May 2, 2024
Homeராசிபலன்கள்ராசி பலன் இன்று-05.01.2023

ராசி பலன் இன்று-05.01.2023

சென்னை:சுபகிருது வருடம் மார்கழி மாதம் 21 ஆம் தேதி வியாழக்கிழமை 5.1.2023. சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.22 மணி வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி. இன்று இரவு 10.30 மணி வரை மிருகசீரிடம். பின்பு திருவாதிரை. விசாகம், அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம்
செல்வத்தை சேர்ப்பீர்கள். அதோடு செல்வாக்கையும் சேர்ப்பீர்கள். நில விற்பனையில் அதிரடியாக லாபம் பார்ப்பீர்கள். கனிவாக நடந்து காதலியின் மனதில் இடம் பிடிப்பீர்கள். இரவு பகல் பாராமல் வேலை செய்து பணவரவை அதிகரிப்பீர்கள். கண் அறுவை சிகிச்சை செய்து கொள்வீர்கள். திடீரென வெளியூர் பயணம் செல்கின்ற வாய்ப்பை பெறுவீர்கள்.

ரிஷபம்
பொருளாதாரத்தில் முன்னேறி உறவினர்களை பொறாமைப்பட வைப்பீர்கள். அரசாங்க வேலையை அலுப்பில்லாமல் செய்வீர்கள். போகும் இடமெல்லாம் செல்வாக்கை பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை புகுத்துவீர்கள். நெக்லஸ் வாங்கி கொடுத்து காதலியை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள்

மிதுனம்
கவனமாக வாகனம் ஓட்டலில் லை என்றால் காலில் அடிபட்டு கட்டு போடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் அனாவசிய பேச்சால் வில்லங்கத்தை விலைக்கு வாங்குவீர்கள். மந்தமாக நடக்கும் வியாபாரத்தால் மனம் சங்கடப்படுவீர்கள். கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலி பிரிந்து பிரிவீர்கள். அவசியமில்லா நட்புகளால் அவமானப்படுவீர்கள்.

கடகம்
கடனை அடைக்க இயலாமல் கவலைப்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்காமல் தடுமாறுவீர்கள். வியாபாரத்தில் சறுக்கல்களை சந்திப்பீர்கள். வீட்டிலும் வெளியிலும் செல்வாக்கு சரிந்து சங்கடப்படுவீர்கள். குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் அவதிப்படுவீர்கள். காதலியின் அலட்சியத்தை தாங்க முடியாமல் தவிப்பீர்கள்.

சிம்மம்
தங்க நகைகள் வாங்கி இல்லத்தரசிகளை மகிழ்ச்சிப் படுத்துவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தொழில் துறையில் ஏற்றம் காண்பீர்கள். வேகம் காட்டி பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகளைச் சரி செய்வீர்கள். பங்குச்சந்தையில் லாபம் பெறுவீர்கள்.

கன்னி
திடீர் பணவரவால் திக்கு முக்காடி போவீர்கள். ஆர்டர்களைப் பெருக்கி முதலாளியின் பாராட்டைப் பெறுவீர்கள். வாக்குத்திறமையால் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள். கனிவோடு பேசி காதலியின் மனதை கவர்வீர்கள். தொழிலில் வேகம் காட்டி எதிரிகளை திணறடிப்பீர்கள். மருத்துவ சிகிச்சையால் தொந்தரவு வந்த நோய்களை விலக்குவீர்கள்.

துலாம்
தந்தையாரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். காசி யாத்திரைக்கு அனுப்பி வைப்பீர்கள். தொழிலுக்காக அரசாங்க கடன் பெறுவீர்கள். உறவினர் மத்தியில் செல்வாக்கு அடைவீர்கள். தாய் மாமனுக்கு தக்க சமயத்தில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் பெறுவீர்கள். மனைவிக்கு நகை வாங்கி கொடுப்பீர்கள். வேலை காரணமாக குடும்பத்தை பிரிவீர்கள்.

விருச்சிகம்
எடுத்த காரியத்தில் தடங்கல்களை சந்திப்பீர்கள். தொழிலில் முடக்க நிலையை காண்பீர்கள். வியாபாரப் போட்டிகளை சமாளிக்க முடியாமல் தடுமாறுவீர்கள். சமுதாயத்தில் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள பெரும் முயற்சி செய்வீர்கள். கை கூடி வரும் நேரத்தில் காதலில் பின்னடைவை காண்பீர்கள். சந்திராஷ்டம காலம். பொறுமை தேவை.

தனுசு
வெளியூர் பயணங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தங்கையின் திருமணத்தை நடத்தி வைப்பீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வீர்கள். முக்கியமான கடன்களை அடைப்பீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். கண்ணில் ஏற்பட்ட கோளாறுக்காக மருத்துவரை சந்திப்பீர்கள்.

மகரம்

தொழில் எதிரிகளை சமாளிக்க முடியாமல் தடுமாறுவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட பண பற்றாக்குறைக்காக நண்பர்களிடம் கடன் வாங்குவீர்கள். விளையாட்டாக சொன்ன பொய்யால் காதலியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். நரம்பு சம்பந்தப்பட்ட வியாதியால் பாதிக்கப்படுவீர்கள். அனாவசியமாக பேசி வேலை இடத்தில் அவஸ்தைப்படுவீர்கள்.

கும்பம்

பிள்ளைகளின் ஆசையை பூர்த்தி செய்வீர்கள். மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் உயர்ந்து நிற்பீர்கள். ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். வீடு கட்ட நிலம் வாங்கி பத்திரம் போடுவீர்கள். விருப்பப்பட்ட பெண்ணின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

மீனம்

போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். வீடு குடி போவதற்கு நாள் குறிப்பீர்கள். வங்கி சேமிப்பை உயர்த்துவீர்கள். கம்பீரமாக பேசி செல்வாக்கை அதிகரிப்பீர்கள். தொழிலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவீர்கள். மன உறுதியால் உடல் உபாதையில் இருந்து வெளி வருவீர்கள். காதலியின் பிறந்தநாளுக்கு கைத்தொலைபேசி பரிசளிப்பீர்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments