Thursday, May 2, 2024
Homeஅரசியல்செய்திரூ.500க்கு சிலிண்டர்!" ராஜஸ்தான் முதல்வர்…மகிழ்ச்சியுடன் கேட்ட ராகுல்.

ரூ.500க்கு சிலிண்டர்!” ராஜஸ்தான் முதல்வர்…மகிழ்ச்சியுடன் கேட்ட ராகுல்.

ஜெய்ப்பூர்: கேஸ் சிலிண்டர் விலை மிக அதிகமாக உள்ளதாகப் பொதுமக்கள் புலம்பி வரும் நிலையில், 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டரை தரவுள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகளை எடுத்தன. மர அடுப்புகளால் பெண்களுக்கு மோசமான நுரையீரல் உள்ளிட்ட மோசமான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருந்தது.

இதன் காரணமாகவே கேஸ் சிலிண்டர் பயன்பாட்டை அதிகரிக்க அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தனர். மத்திய அரசும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டை அதிகரிக்க உஜ்வாலா திட்டத்தைக் கடந்த 2016ஆம் ஆண்டு கொண்டு வந்தது

கேஸ் சிலிண்டர்
இத்திட்டத்தின் மூலம் பல கோடி ஏழை குடும்பத்தினருக்கு கேஸ் சிலிண்டர் கனெக்ஷன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கேஸ் சிலிண்டர் கனெக்ஷன் வைத்துள்ளவர்களும் கூட சிலிண்டர்களை வாங்கத் தயக்கம் காட்டுகிறார்கள். மேலும், பலர் மீண்டும் விறகு அடுப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்

ராஜஸ்தான் முதல்வர்
மேலும், கேஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.. இதற்கிடையே ராஜஸ்தான் மாநிலத்தில் ரூபாய் 500-க்கு கேஸ் சிலிண்டரை அரசு அளிக்கும் என்று அசோக் கெலாட் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அடுத்தாண்டு இறுதியில் அங்குத் தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கிமயானதாக பார்க்கப்படுகிறது

500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘நான் பட்ஜெட்டுக்கு தயாராகி வருகிறேன்… இப்போது ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். உஜ்வாலா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி ஏழைகளுக்கு எல்பிஜி இணைப்புகளை வழங்கினார். ஆனால் சிலிண்டர் இப்போது காலியாக உள்ளது. சிலிண்டர் இப்போது 1,040 ரூபாய்க்கு விற்க உள்ளது. நாங்கள் அதை 500 ரூபாய்க்குத் தர உள்ளோம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறுவோருக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை தலா 500 ரூபாய்க்கு வழங்குவோம்’ என்று அசோக் கெலாட் தெரிவித்தார்

ராகுல் காந்தி ரியாக்ஷன்
அடுத்த ஆண்டு ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதற்கு அசோக் கெலாட்டின் இந்த அறிவிப்பு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தானில் இப்போது ராகுல் காந்தி பாத யாத்திரை சென்று கொண்டிருக்கும் நிலையில், அவரது முன்னிலையில் கெலாட் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அசோக் கெலாட் இந்த அறிவிப்பை வெளியிடும் போது, அதை மேடையில் இருந்த ராகுல் காந்தி மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தார்

காங்கிரஸ்
இந்த அறிவிப்பு நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு பூஸ்ட் தரும். அதேநேரம் அடுத்தாண்டு காங்கிரஸ் கட்சியால் ராஜஸ்தானில் ஈஸியாக வெல்ல முடியும் எனச் சொல்ல முடியாது. ஏனென்றால் அங்கு ஏற்கனவே, காங்கிரஸில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. அங்கு அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே மோதல் நிலவி வருகிறது. சச்சின் பைலட் எப்படியாவது முதல்வராகிவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இருப்பினும், அசோக் கெலாட்டும் அவரது ஆதரவாளர்களும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வெல்லுமா?
இந்தச் சூழலில் தான் ராஜஸ்தானில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே நடக்கும் மோதலை சமாளிக்க காங்கிரஸ் தலைமை தொடர்ந்து முயன்று வருகிறது. சச்சின் பைலட்டை வெளிப்படையாக எதிர்க்கும் வகையில் பேசுவது, பின்னர் சில நாட்களில் சமாதானம் எனச் சொல்வது என்பதையே இரு தரப்பும் வாடிக்கையாக வைத்துள்ளது. இப்படி உள்ளே மோதல் நிலவி வருவதால், காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்குமா என்பதில் குழப்பம் நீடித்தே வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments