Thursday, May 2, 2024
Homeஇந்திய செய்திகள்UPI பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்.

UPI பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்.

உலக அளவில் யுபிஐ ஆப்கள் மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனையில் இந்தியாவுக்கு கனிசமான பங்கு உள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு முன்னரே இந்தியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை பரவலாக பயன்படுத்தப்பட்டஃது. கொரோனாவிற்கு பிறகான காலத்தில் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை முக்கிய பங்காற்றி வருகிறது. National Payment Corporation Of India எனப்படும் என்பிசிஐ-யின் தரவுகளின படி கடந்த செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் சுமார் 11 லட்சம் கோடி அளவிற்கு யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது.

தெருவோர கடைகள் முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை யுபிஐ பரிவர்த்தனைக்கான வசதி உள்ளது. பர்சில் காசே தேவையில்லை. யுபிஐ ஆப் இருந்தால் போதும். டீ முதல் நகை வரை எதையம் வாங்கலாம். ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் யுபிஐ ஆப்பை பயன்படுத்தி பணம் அனுப்பலாம். ஆனால் அதற்கு இப்போது செக் வைத்துள்ளது என்பிசிஐ.

இந்திய அரசாங்கம் அறிவித்துள்ள முதல் கட்டுப்பாடு யுபிஐ ஆப்கள் வழியாக அனுப்பப்படும் தொகை தொடர்புடையது. NPCI-யின் புதிய விதிமுறையின் படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 25,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான தொகையை மட்டுமே UPI ஆப்கள் வழியாக அனுப்ப முடியும். அதாவது கனரா வங்கி போன்ற சிறிய வங்கிகள் ரூ.25,000 வரை என்கிற வரம்பை நிர்ணயம் செய்துள்ளன. அதேசமயம் எஸ்பிஐ போன்ற பெரிய வங்கிகள் ஆனது தினசரி யுபிஐ பரிவர்த்தனை வரம்பை ரூ.1,00,000 என்று நிர்ணயம் செய்துள்ளன. இந்த வரம்பு – வங்கிக்கு வங்கி மாறுபடும் என்று அர்த்தம்.

NPCI-யின் இரண்டாவது கட்டுப்பாடு ஒரு நாளைக்கு எத்தனை முறை யுபிஐ ஆப்களை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யலாம் என்பதோடு தொடர்புடையது. இனிமேல் யுபிஐ ஆப்களை பயன்படுத்தி – ஒரு நாளைக்கு அதிகபட்சமாக இருபது பரிமாற்றங்களை மட்டுமே செய்ய முடியும். இந்த வரம்பும் வங்கியின் கொள்கைகளை பொறுத்து வேறுபடலாம்.சுருக்கமாக GPay என்று அழைக்கப்படும் Google Pay ஆப்பிற்கான தினசரி பரிவர்த்தனை வரம்பு 1,00,000 ரூபாய் ஆகும். மேலும் இது அனைத்து UPI ஆப்கள் மற்றும் வங்கிக் கணக்குகளிலும் ஒரு நாளைக்கு மொத்தம் 10 பரிவர்த்தனைகளை மட்டுமே அனுமதிக்கும்.

PhonePe ஆப்பிற்கான தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ.1,00,000 ஆகும். இருப்பினும் இந்த வரம்பு உங்களுடைய வங்கிக்கு ஏற்ப மாறுபடலாம். மேலும் ஒவ்வொரு நாளும் PhonePe மூலம் அதிகபட்சமாக 10 முதல் 20 பரிவர்த்தனைகளை மட்டுமே செய்ய முடியும்.Paytm ஆப்பிற்கான தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ.1,00,000 ஆகும். பேடிஎம் ஆப்பின் டெய்லி லிமிட்டை பொறுத்தவரை, ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 20 முறை மட்டுமே பணபரிமாற்றங்களை செய்ய முடியும்.

இந்த புதிய கட்டுப்பாடுகள் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது என்றும் என்பிசிஐ அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments