Friday, May 17, 2024
Homeஉலக செய்திகள்லடாக் எல்லையில் ராணுவத்தை குவிக்கும் சீனா…எதற்காக இந்த ஏற்ப்பாடு?

லடாக் எல்லையில் ராணுவத்தை குவிக்கும் சீனா…எதற்காக இந்த ஏற்ப்பாடு?

லடாக்: கிழக்கு லடாக் எல்லையில் 70 ஆயிரம் படை வீரர்களை சீனா குவித்து இருப்பதாகவும் இந்தியாவிற்கு சொந்தமான டெப்சாங் பகுதியில் தொடர்ந்து கட்டுமானங்களை மேற்கொண்டு வருவதாகவும் தி டெலிகிராப் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்த தகவலை அந்த ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்தியா – சீனா இடையிலான எல்லை மோதல் தீவிரம் அடைந்து உள்ளது. லடாக்கில் வாலாட்டி வரும் சீனா இன்னொரு பக்கம் அருணாசலப்பிரதேசத்தில் இந்தியாவிற்கு எதிராக காய் நகர்த்தி வருகிறது

சமீபத்தில் அருணாசலப்பிரதேச எல்லையில் தவாங் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்ய முயன்றது. ஆனால் இதை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்த எல்லைக்குள் நுழைய முயன்ற சீனாவை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினார்கள்

அருணாசலப்பிரதேசம்
ஆனாலும் தொடர்ந்து அருணாசல பிரதேச எல்லையில் சீனா படைகளை குவித்து வருகிறது. அதேபோல் ட்ரோன் மூலமாக சோதனைகளை செய்து வருகிறது. மேலும் சீனாவின் போர் விமானங்களும் இங்கே குவிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் கிழக்கு லடாக் எல்லையில் 70 ஆயிரம் படை வீரர்களை சீனா குவித்து இருப்பதாகவும் இந்தியாவிற்கு சொந்தமான டெப்சாங் பகுதியில் தொடர்ந்து கட்டுமானங்களை மேற்கொண்டு வருவதாகவும் தி டெலிகிராப் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்த தகவலை அந்த ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. எல்ஏசி பகுதியில் அதாவது கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா கூடுதல் கட்டுமானங்களை மேற்கொண்டு உள்ளதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ள நிலையில்தான் தி டெலிகிராப் ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது

என்ன செய்தி
அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், லடாக் எல்லையில் சீனா அதிக அளவு படைகளை குவித்து உள்ளனர். சோதனை டிரோன்களை களமிறக்கி உள்ளது. இரண்டு நாடுகளும் பரஸ்பரம் வெளியேறிய நிலப்பகுதியில் சீனா தனது ட்ரோன்களை பறக்கவிட்டுக்கொண்டு இருக்கிறது. சீனா கிழக்கு லடாக் பகுதிக்கு அருகே 70 ஆயிரம் படைகளை குவித்து உள்ளது. அங்கு தொடர்ந்து கட்டுமானங்களை சீனா மேற்கொண்டு வருகிறது. இங்கே சாலைகள், ஹெலிபேட்கள், ராணுவ கேம்ப்கள் ஆகியவற்றை அமைத்து வருகின்றனர்.

டெப்சாங்
டெப்சாங்கில் இந்தியா உரிமை கொண்டாடி வரும் நிலப்பரப்பில் சீனா இந்த கட்டுமானங்களை மேற்கொண்டு உள்ளது. இந்த பகுதியை கைப்பற்றினால் லடாக்கில் பல்வேறு மலை பகுதிகளை கைப்பற்றுவது எளிதாகும். இதன் காரணமாகவே இங்கு படைகள், போர் விமானங்கள், டிரோன்களை சீனா அதிகம் களமிறக்கி உள்ளதாம். அதேபோல் முன்பு சண்டை நடைபெற்ற கல்வான் பகுதியிலும் சீனா படைகளை குவித்து வருவதாகவும், அங்கே படை நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும் இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சீனா
இந்தியாவில் கடந்த 2020 மே மாதத்தில் இருந்து சீனா ஆக்கிரமித்த 1000 சதுர கிலோ மீட்டர் பரப்பை அப்படியே கட்டுப்பாட்டில் வைக்கவும், கூடுதல் இடங்களில் ஆக்கிரமிப்பை செய்யவும் முயன்று வருவதாக இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. முன்னதாக கல்வான் மோதலுக்கு பின் செய்யப்பட்ட பேச்சுவார்த்தையில் இரண்டு தரப்பும் ஏற்கனவே 2020க்கு முன் இருந்த கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் சீனா அதை மீறி, புதிதாக ஆக்கிரமித்த பகுதிகளிலேயே படைகளை வைத்து இருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா எப்படி பதில் அளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments