Thursday, May 16, 2024
Homeஇந்திய செய்திகள்வந்தாச்சு பொங்கல் பரிசு அறிவிப்பு…அரிசி அட்டை தாரர்களுக்கு தலா 1000ரூ ரொக்கம் …

வந்தாச்சு பொங்கல் பரிசு அறிவிப்பு…அரிசி அட்டை தாரர்களுக்கு தலா 1000ரூ ரொக்கம் …

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் இருக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000/- ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை!

2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தை பொங்கல்
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஜனவரி 2ஆம் தேதி முதல்
ஜனவரி 2ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இந்த முறை கரும்பு, வெல்லம், பருப்பு, நெய், மஞ்சள் உள்ளிட்ட பரிசு தொகுப்புகள் வழங்கப்படவில்லை. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள். இந்த அறிவிப்புக்கு ரூ 2,356. 67 கோடி அரசுக்கு செலவு ஏற்படும். கடந்த முறை ரொக்கம் வழங்கப்படாத நிலையில் இந்த முறை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் பொங்கல் எப்போது
தமிழகத்தில் தைப் பொங்கல் திருநாள் இந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஏழை எளிய மக்களும் கொண்டாடும் வகையில் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அத்துடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும். கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற போது பொங்கல் பண்டிகைக்கு ரொக்கம் வழங்கப்படவில்லை.21 பொருட்கள் இல்லை
அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. ரொக்க பணம் வழங்க பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிய நிலையில் தமிழக அரசு வழங்கவில்லை. அவ்வாறு வழங்கிய 21 பொருட்களிலும் குளறுபடிகள் இருந்தன. சிலருக்கு சில பொருட்கள் கிடைக்கவில்லை, வெல்லம் உருகியது, புளியில் பல்லி தலை என்றெல்லாம் புகார்கள் எழுந்தன. மொத்ததத்தில் பொருட்கள் தரமானது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

முதல்வர் தலைமையில் ஆலோசனை
இதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. இந்த முறை அவ்வாறு ஏதும் நடக்கக் கூடாது என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ரூ 1000 ரொக்கம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன் பச்சரிசியும் சர்க்கரையும் தலா ஒரு கிலோ வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments