Thursday, May 16, 2024
Homeஅரசியல்செய்திஉடனிருக்கும் 4 பேரையும் வைத்து ஒரு கட்சி தொடங்குகளேன்… ஓ. பி.எஸ்.இடம் நக்கள் செய்த ஜெயக்குமார்.

உடனிருக்கும் 4 பேரையும் வைத்து ஒரு கட்சி தொடங்குகளேன்… ஓ. பி.எஸ்.இடம் நக்கள் செய்த ஜெயக்குமார்.

சென்னை: நேற்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் பேசியபோது எடப்பாடி பழனிச்சாமியை புதுகட்சி துவங்க கூறினார். இந்நிலையில் தான், ‛‛நாம் ஒருவர் நமக்கு நால்வர் என ஓ பன்னீர் செல்வம் செயல்பட்டு வருகிறார். அவர் வேண்டுமானால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை துவங்கலாம்” என முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் பெயர் பரிந்துரைத்து கடுமையாக தாக்கினார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர்.ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நீக்கம் செய்தது. மேலும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

ஓபிஎஸ் மாவட்ட செயலாளர் கூட்டம்
இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஓ பன்னீர் செல்வம் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்தார். மேலும் நேற்று சென்னை வேப்பேரி திருமண மண்டபத்தில் ஓ பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் புதிய கட்சியை துவங்கி செயல்பட முடியுமா? என அவர் சவால் விடுத்தார்.ஜெயக்குமார் பதிலடி
இதற்கு இன்று சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை பெசன்ட் நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ஓபிஎஸ்ஸை கடுமையாக தாக்கி பேசினார். இதுபற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:தெளிவாக இருக்கிறோம்
ஓ பன்னீர் செல்வம் தொடர்ச்சியாக திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார். தேவையில்லாத கருத்துகளை கூறி கட்சி தொண்டர்களை குழப்பும் வேலைகளில் ஓ பன்னீர் செல்வம் ஈடுபட்டுள்ளார். ஆனால் கட்சியில் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்த முடியாது. ஏனென்றால் அனைவரும் தெளிவாக தான் இருக்கிறோம். கிளை கழகம், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அத்தனை பேரும் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வருகிறோம்.

ஓபிஎஸ் முன்னேற்ற கழகம்
இந்த சூழலில் நாங்கள் ஏன் புதுகட்சியை ஆரம்பிக்க வேண்டும். நாங்கள் தான் அதிமுக கட்சி. ஓபிஎஸ் வேண்டுமானால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பிக்கலாம். உங்கள் பலத்தை நீங்கள் காட்டலாம். தற்போது இரட்டை இலை எங்களிடம் உள்ளது. தலைமை கழகம் எங்களிடம் உள்ளது. நிர்வாகிகள் எங்களிடம் உள்ளனர். இதனால் புதுகட்சியை துவங்க வேண்டிய அவசியமே இல்லை. ஓபிஎஸ் வேண்டுமானால் தனிக்கட்சி ஆரம்பிக்கலாம்.நாம் ஒருவர் நமக்கு நால்வர்
ஓபிஎஸ் நாம் ஒருவர் நமக்கு நால்வர் என செயல்பட்டு வருகிறார். நால்வர் அணி என்பது ஜெயலலிதா காலத்தில் துவங்கி அது எப்படி போனது என்பது யாருக்கும் தெரியாது. எம்ஜிஆர் காலத்தில் போட்டி அணி துவங்கி காணாமல் போனது. அதேபோல் ஓபிஎஸ்ஸின் தற்போதைய அணியும் காணாமல் போகும்.பொதுக்குழு தான் நீக்கியது
அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். ஏனென்றால் தலைமை கழகம் என்பது நாங்கள் தான். இதனை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உறுதி செய்து தலைமை கழக சாவியை எங்களிடம் வழங்கி உள்ளது. ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் இருந்து நீக்கவில்லை. அவரை கட்சியின் பொதுக்குழு தான் நீக்கம் செய்தது. பொதுக்குழு தான் சர்வாதிகாரம் படைத்தது. பொதுக்குழுவே ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கிய போது அவர் எப்படி கட்சியின் கொடியை பயன்படுத்த முடியும்?.

சட்ட நடவடிக்கை
உயர்நீதிமன்றத்தின் இருவர் அமர்வு பொதுக்குழு முடிவை ஏற்றுக்கொள்வது போல் உத்தரவிட்டுள்ளது. அப்படி இருக்கையில் கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஓ பன்னீர் செல்வம் கட்சியின் கரைவேட்டி கட்டி, கொடியை பயன்படுத்தி கட்சியின் லெட்டபேட் பயன்படுத்த முடியும்?. தற்போது வக்கீல் நோட்டீஸ் வழங்கி உள்ளோம். கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த முடியாத அளவுக்கு முழுமையான சட்ட நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments