Friday, May 17, 2024
Homeசினிமாவிஜயின் ஆடை குறித்த விமர்சனத்திற்கு விளக்கம் அளித்த ஜேம்ஸ் வசந்தன்!!!

விஜயின் ஆடை குறித்த விமர்சனத்திற்கு விளக்கம் அளித்த ஜேம்ஸ் வசந்தன்!!!

சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படம் வரும் 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் கடந்த ஆண்டு இறுதியில் பிரம்மாண்டமான அளவில் வெளியானது. விஜய்யின் வாரிசு படம் நடிகர் விஜய்யின் வாரிசு படம் வரும் 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கடந்த ஆண்டில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது வாரிசு படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இந்தப் படத்தையடுத்து தனது அடுத்தப் படமான தளபதி 67 படத்தில் விஜய் நடிக்கத் துவங்கியுள்ளார். இதன் டெஸ்ட் சூட் நடத்தப்பட்டுள்ளது.

இசை வெளியீட்டு நிகழ்ச்சி வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ராதிகா, ஜெயசுதா, குஷ்பூ, ஷாம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெயிலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியும் கடந்த ஆண்டு இறுதியில் சென்னையில் நடந்தது.

விமர்சனங்களுக்கு உள்ளான விஜய்யின் லுக் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் ரசிகர்கள் தான் தனக்கு மிகப்பெரிய போதை என்று பேசினார். அவரது பேச்சு வைரலானது போலவே நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரது லுக்கும் விமர்சனங்களுக்கு உள்ளானது. மிகவும் எளிமையாக கலைந்த தலைமுடி மற்றும் தாடியுடன் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது விமர்சனங்களை ஏற்படுத்தியது.

ஜேம்ஸ் வசந்தன் கமெண்ட் இசையமைப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தனும் விஜய்யின் லுக் குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாரிசு இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய்யை தான் பார்த்ததாகவும் அவரது லுக் தனக்கு நெருடலை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். நடிகர்களை பின்பற்றும் ரசிகர்களுக்கு முன்மாதிரியாக அவர்கள் இருக்க வேண்டியது அவசியம் என்நும் அவர் கூறியிருந்தார்.

விஜய் ரசிகர்கள் எந்த நிகழ்ச்சிக்கு எப்படி செல்ல வேண்டும் என்ற புரிதலை இத்தகைய ஹீரோக்கள் தன்னை பாலோ செய்யும் ரசிகர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்திருந்தார். அவரது இந்த பேச்சு விஜய் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தினாலும் அவரது பேச்சின் நியாயம் சிறப்பானதாக பார்க்கப்பட்டது.

ஜேம்ஸ் வசந்தன் விளக்கம் இந்நிலையில், தனது சமீபத்திய பேச்சில் விஜய் போன்ற சிறப்பான நடிகரை இந்தளவிற்கு பொது வெளியில் யாரும் விமர்சிக்க மாட்டார்கள் என்று ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார். ஆனால் சொல்ல வேண்டிய கட்டாயம் தனக்கு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 27 ஆண்டுகளாக ஊடகத்தில் பணியாற்றும் தனக்கு இந்த பேச்சு தனக்கு எந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தே தான் அவ்வாறு பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்புகள் குறித்து கவலையில்லை ஆனால் மூத்த ஊடகவியலாளரான தனக்கு ஒரு கடமை இருப்பதாகவும் எதிர்ப்புகள் குறித்து தான் எப்போதுமே கவலைப்பட்டதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். முக்கியமான சேனல்களில் பணியாற்றிவரும் ஜேம்ஸ் வசந்தன், ஊடகங்களில் பணியாற்ற முற்படும் பல இளைஞர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments