Monday, April 29, 2024
Homeஇந்திய செய்திகள்130 சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை…

130 சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.1.2023) தலைமைச் செயலகத்தில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 130 சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கு உதவி மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதன்படி 5 சித்தா உதவி மருத்துவர்கள், 5 ஆயுர்வேதா உதவி மருத்துவர்கள், 5 ஓமியோபதி உதவி மருத்துவர்கள் என 15 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

அரசு மருத்துவமனைகளில் சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி மருத்துவத்தின் செயல்பாட்டினை மேலும் மேம்படுத்தும் வகையில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் இயங்கும், இந்திய மருத்துவப் பிரிவு உள்ள அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருந்தகங்களில் காலியாக உள்ள உதவி மருத்துவ அலுவலர்கள் (ஆயுஷ்) பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு சென்னையில் இரண்டு மையங்களில் இதற்கான தேர்வுகள் நடைபெற்றது.

தற்போது அதில் தேர்வு செய்யப்பட்ட 130 உதவி மருத்துவ அலுவலகர்களுக்கு இன்று பணி ஆணை வழங்கப்பட்டது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையில் தமிழ்நாடு முழுவதும் 1.541 சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை பிரிவுகள் உள்ளன. மேலும், தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின்போது 79 சிறப்பு சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு, இம்மையங்களின் வாயிலாக சுமார் 70,000 மக்கள் பயன் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments